புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மொத்த பழியையும் மீனா மேல் திருப்பி போட்ட ரோகினி.. விஜயாவை பகடகாயாக வைத்து முத்துவுக்கு வைத்த ஆப்பு

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி எத்தனையோ பொய்யும் பித்தலாட்டத்தையும் பண்ணி தற்போது ஒரு நல்ல மருமகள் போல் டிராமா செய்து மனோஜ்க்கு சிறந்த மனைவியாக நடித்துக் கொண்டு வருகிறார். பணக்கார வீட்டு பொண்ணு என்று சொன்னது முதலில் பொய், அதை நம்பி பணத்தாசை பிடித்த விஜயா மருமகளை தலையில் தூக்கி வைத்து ஆடி வருகிறார்.

இரண்டாவதாக பியூட்டி பார்லர் சொந்தமாக வைத்திருக்கிறேன் என்று குடும்பத்தில் இருப்பவர்களையும் கட்டின புருஷனையும் ஏமாற்றி வருகிறார். அதற்கு மேல் தனக்கு அம்மா கிடையாது அப்பா மலேசியாவில் இக்கட்டான சுழலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அதனால் மாமா தான் இருக்கிறார் என்று பிரவுன் மணியை மாமா போல் நடிக்க வைத்து அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவி விட்டார்.

மீனாவை எதிரியாக நினைத்து விஜயா உடன் சேர்ந்து டார்கெட் பண்ணும் ரோகிணி

போதாதற்கு அண்ணாமலையின் பணத்தை ஜீவா மூலமாக திரும்ப பெற்று அது தன்னுடைய அப்பா கொடுத்த பணம். அதன் மூலம் மனோஜ் பிசினஸ் பண்ண வேண்டும் என்பதற்காக அப்பா ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருக்கிறார் என்று அனைவரையும் நம்ப வைத்து ஷோரூம் பிசினஸை நடத்தி வருகிறார். இப்படி தொடர்ந்து பொய்க்கும் மேல் பொய் பித்தலாட்டம் பண்ணி பல தில்லாலங்கடி வேலைகளை செய்து ரோகிணி ஓவராக ஆட்டம் ஆடி வருகிறார்.

இதெல்லாம் விட ஏற்கனவே ரோகிணிக்கு கல்யாணம் ஆகி அந்த கணவர் இறந்து போன சூழ்நிலையில் இவர்களுக்கு பிறந்த ஒரு குழந்தை க்ரிஷ் அம்மாவிடம் வளர்ந்து கொண்டு வருகிறார் என்பதும் யாருக்கும் தெரியாது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது குழந்தைக்கு முயற்சி பண்ணிவரும் ரோகிணி ஹாஸ்பிடல் அவ்வப்பொழுது போய் செக்கப் பண்ணிட்டு வருகிறார்.

ஏனென்றால் மனோஜுடன் குழந்தை பிறந்து விட்டால், தான் செய்த தவறுகள் பற்றி குடும்பத்திற்கு தெரிந்தாலும் குழந்தை இருப்பதால் யாரும் பெருசாக எதுவும் பண்ண முடியாது என்ற ஒரு காரணத்திற்காக இந்த மாதிரி சதி வேலையை பண்ணுவதற்கு முயற்சி எடுத்து வருகிறார். அந்த வகையில் ஹாஸ்பிடலுக்கு போகும் பொழுது மீனா மற்றும் சீதாவுக்கு சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஒரு விஷயம் நடந்து விட்டது.

அதாவது ஏற்கனவே ரோகிணிக்கு முதல் குழந்தை பிறந்து இடைவேளையானதால் இரண்டாவது குழந்தை பெற்றெடுப்பதற்கு ஏதாவது பிரச்சினை வருமா என்று விசாரிப்பதற்காக வந்திருக்கிறார் என்பது தெரிந்து விட்டது. இதை தெரிந்து கொண்ட மீனா குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும் படி விஷயம் வெளிய வந்துவிட்டது.

உடனே விஜயா, ரோகினியை கூப்பிட்டு ஏற்கனவே ஒரு கருவை சுமந்தியா என்று குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி கேள்வி கேட்கிறார். ஆனால் ரோகிணி இதெல்லாம் அசால்ட்டு என்பதற்கு ஏற்ப அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஒரு பெரிய ட்ராமாவை நடத்தி விடுகிறார். அதன்படி ஆமாம் நான் ஏற்கனவே கருவே சுமந்தேன். ஆனால் அந்த டைம் என்னுடைய அப்பா இக்கட்டான சூழலில் இருந்ததால் அதை நினைத்து மணமுடைந்து போனதால் அந்த கருக்கலைந்து போய்விட்டது.

இதை நான் யாரிடமும் சொல்லவில்லை, சொன்னால் வருத்தப்படுவார்கள் என்ற காரணத்திற்காக மறைத்து விட்டேன். ஏன் இன்னும் சொல்லப்போனால் மனோஜ்க்கு கூட நான் சொல்லவில்லை. ஏனென்றால் மனோஜ்க்கு தெரிந்தால் அவன் வேதனைப்படுவான் என்பதற்காகத்தான் என்று நானே எல்லா வேதனையும் மனசுக்குள் போட்டு தவித்து வந்தேன் என்று ஒரு சென்டிமென்ட் கதையை சொல்லி அனைவரையும் நம்ப வைத்து விட்டார்.

உடனே எல்லோரும் ரோகினிக்கு ஆறுதல் சொல்லி பரிதாபமாக பேசிவிட்டு போய் விட்டார்கள். இதனை அடுத்து விஜயாவிடம் தனியாக பேசும் ரோகிணி, இந்த மீனா என்னுடைய விஷயத்தில் ரொம்பவே தலையிடறாங்க. நான் பிசினஸில் ஜெயித்துக் கொண்டு வருவதால் பொறாமையில் எங்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார்.

இப்படியே போனால் நானும் மனோஜும் நிம்மதியாக இருக்க முடியாது என்று விஜயா மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். உடனே விஜயாவும் அதற்கு என்ன பண்ணலாம் என்று யோசனை கேட்கிறார். அதன்படி ரோகினி, முத்து மற்றும் மீனா இந்த வீட்டில் இருக்கும் வரை இந்த மாதிரி ஏதாவது பிரச்சனை பண்ணிக் கொண்டே தான் இருப்பார்கள். நாமும் சந்தோஷமாக இருக்க முடியாது.

அதனால் எதாவது ஒரு பிரச்சனை பண்ணி அவர்களை இந்த வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று ரோகிணி, விஜயாவிற்கு ஐடியா கொடுக்கிறார். ஏற்கனவே விஜயாவும் இதை தான் செய்ய வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த நிலையில் ரோகிணி சொன்னதும் விஜயாவிற்கும் மிகப்பெரிய சந்தோஷம் ஏற்பட்டுவிட்டது. அந்த வகையில் இருவரும் கூட்டணி சேர்ந்து முத்து மற்றும் மீனாவிற்கு ஆப்பு வைக்கும் விதமாக சதி பண்ணப் போகிறார்கள்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News