வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தில்லாலங்கடி வேலையை ஆரம்பித்து மீனாவை தொந்தரவு செய்யும் ரோகிணி.. முத்துவுடன் சேரப்போகும் சத்தியா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினியின் முதல் கணவர், குழந்தையை பற்றி விஷயங்களை தெரிந்து கொண்ட தினேஷ் என்பவர் அவ்வப்போது ரோகினியை பிளாக்மெயில் செய்து பணத்தை பறித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இந்த தினேஷின் தொல்லை தாங்க முடியாததால் ரோகிணி, லோக்கல் ரவுடி சிட்டி மூலம் பிளாக்மெயில் பண்ணிய தினேஷை ஜெயிலுக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் ஜெயிலில் இருந்து திரும்பி வந்த தினேஷ் மீண்டும் ரோகினியை பிளாக்மெயில் செய்து 30 லட்ச ரூபாய் பணத்தை ஒரே அடியாக கொடுத்துவிடு உன் வழிக்கே வரமாட்டேன் என்று பெரிய தொகையை கேட்டு டிமாண்ட் வைத்து விட்டார். இந்த பணத்தை கொடுக்க முடியாத ரோகினி மறுபடியும் லோக்கல் ரவுடி சிட்டியிடம் உதவி கேட்கிறார்.

ரோகிணி மீது முத்துவுக்கு ஏற்படும் சந்தேகம்

ஏற்கனவே லோக்கல் ரவுடி சிட்டி, முத்து மற்றும் மீனாவால் பாதிக்கப்பட்டு பயங்கர கோபத்தில் இருப்பதால் ரோகிணி கேட்ட உதவியின் மூலம் முத்து மீனாவிற்கு குடைச்சல் கொடுக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டார். அந்த வகையில் ரோகினிடம் நீங்கள் கேட்டபடி உங்களை பிளாக்மெயில் பண்ணும் தினேஷ் உங்கள் வழியில் தலையிடாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்.

ஆனால் அதற்கு பதிலாக முத்துவிடம் இருக்கும் ஒரு வீடியோவை நீங்கள் லீக் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிறகு நடந்த உண்மை அனைத்தையும் ரோகினிடம் சொல்லிய நிலையில், ரோகிணிக்கும் வேற வழி இல்லை. அவர் தப்பிப்பதற்காக இந்த விஷயத்தை நான் பண்ணுகிறேன் என்று லோக்கல் ரவுடி சிட்டியிடம் வாக்குறுதி கொடுத்து விட்டார்.

இதனை அடுத்து வீட்டுக்கு போன ரோகிணி, தலையில் அடிபட்டிருக்கும் மீனாவை பார்த்து உங்களுக்கு இனி ஒரு கெட்ட நேரம் ஆரம்பமாகப் போகிறது. நான் இப்பொழுதுதான் ஒரு சாமியாரை பார்த்துட்டு வந்தேன். அவர் சொன்ன குறிபடி எனக்கு எல்லாமே இனி நல்லதாக நடக்கும். அதனால் மனோஜ் மற்றும் எனக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஏதோ ஒரு பிரச்சனை வரப்போகிறதாக அவர் கூறியிருக்கிறார் என்று ரோகினி அவருடைய தில்லாலங்கடி வேலையை ஆரம்பித்து விட்டார். இதனால் அப்செட் ஆன மீனா யாருக்கு என்ன பிரச்சனை ஆகப்போகிறது என்ற குழப்பத்தில் இருக்கிறார். அப்பொழுது முத்து, நல்லதே நினை ஒன்றுமே கெட்டது நடக்காது என்று மீனாவுக்கு ஆறுதல் கூறுகிறார்.

அடுத்ததாக எப்படியாவது முத்துவின் போனில் இருக்கும் வீடியோவை எடுக்க வேண்டும் என்று ரோகிணி பிளான் பண்ணி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முத்து போனிலிருந்து வீடியோவை சமூக வலைதளங்களில் அனுப்பி மீனா தம்பியை அசிங்கப்படுத்தி விடுகிறார்.

இதை பார்த்து அனைவரும் மீனாவின் தம்பி திருடன் என்பது மாதிரி பேசிக் கொள்கிறார்கள். அத்துடன் இந்த வீடியோவை அனுப்பியது முத்து தான் என்று ஆரம்பத்தில் மீனா மற்றும் குடும்பத்தில் இருப்பவர்கள் கோபப்படுகிறார்கள்.

ஆனால் முத்து மீது எந்த தப்பும் இல்லை என்று நிரூபிக்கும் போது இதற்கு காரணம் சிட்டி தான் என்று தெரிய வரும் பொழுது முத்து உடன் சத்யா சேர்ந்து லோக்கல் ரவுடி சிட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவருடைய கேரக்டருக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள்.

இதனை அடுத்து இந்த காரியத்தை செய்தது ரோகிணி தான் என்பதும் முத்துவுக்கு தெரிய வந்துவிடும். ஆனால் எதற்காக ரோகினி இந்த மாதிரி விஷயத்தை பண்ணினார் என்ன விஷயங்கள் அவருக்கு பின்னாடி ஒளிந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் விதமாக முத்து அடுத்தடுத்து முயற்சி எடுக்கப் போகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News