வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

முத்துவின் போனை ஆட்டைய போட்ட ரோகினி.. குறும்படம் போட்டு மீனாவின் தங்கை கல்யாணத்தை நிறுத்திய சிட்டி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் ஆசைப்பட்ட மாதிரி டீலர்ஷிப் கையில் கிடைத்துவிட்டது. இதை கொண்டாடும் விதமாக சரக்கு பார்ட்டி வைத்திருக்கிறார். இதை தனக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்று ரோகினி, வித்யாவிடம் முத்து மற்றும் மீனாவை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இரு. அவர்கள் அசரும் பொழுது அந்த போனை எடுத்து விட வேண்டும் என்று சொல்கிறார்.

ஆனால் மீனா அங்கு பார்ட்டி நடக்கப்போகிறது அனைவரும் குடிக்க போகிறார்கள் என்று தெரிந்ததும் முத்துவை கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்து விட்டார். ஆனால் அண்ணாமலை, அதற்குள் உங்களுக்கு என்ன அவசரம் வீட்டுக்கு பொறுமையாக வாங்க. இருந்து நல்லா சாப்பிட்டு வாங்க என்று சொல்லி முத்து மற்றும் மீனாவை இருக்க வைத்து விட்டு அண்ணாமலை, விஜயாவை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார்.

இதுதான் சான்ஸ் என்று ரோகினியும் இதில் எப்படியாவது முத்துவை குடிக்க வைத்து விட வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார். அதன்படி மனோஜ் மற்றும் ரவி குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் முத்து, மீனா குடிக்க கூடாது என்று சொன்னதற்காக அமைதியாக இருக்கிறார். இருந்தாலும் மனோஜ் மற்றும் ரவி தொடர்ந்து முத்துவை குடிக்க சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

கடைசியில் மீனாவுக்கு போன் பண்ணி கேட்கலாம் என்று முத்து போன் பண்ணி கெஞ்சுகிறார். ஆனால் மீனா நோ சொல்லியதால் முத்து கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார். இது எதுவும் தெரியாத ரோகினி முத்து குடிக்க ஆரம்பித்து இருப்பார் போனை எடுக்க சரியான நேரம் என்று உள்ளே வந்து பார்க்கிறார். ஆனால் முத்து குடிக்காமல் இருப்பதை பார்த்து ரோகிணி அப்செட் ஆகிவிட்டார்.

பிறகு சாப்பிட டைம் ஆயிருச்சு என்று மீனா, முத்துவை கூப்பிடுவதற்கு வருகிறார். ஆனால் வித்யா மீனாவை தடுத்து விட்டு முத்து வருவார் நீங்க ஏன் அவங்களுக்காக வெயிட் பண்றீங்க. நீங்களும் சுருதியும் சேர்ந்து சாப்பிடுங்கள் என்று சாப்பாட்டை கொடுத்து டைவர்ட் பண்ணி விட்டார். இதை எல்லாம் தொடர்ந்து மனோஜ் மற்றும் ரவி குடிப்பதை பார்த்து முத்துவும் குடிக்க ஆரம்பித்து விட்டார்.

உடனே ரோகினி, வித்யாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டு விட்டார். நம்ம போட்ட பிளான் படி எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது. இனி முத்துவிடம் இருக்கும் போனை ஈசியாக எடுத்து விடலாம் என்று சொல்கிறார். அதன்படி ரோகினி, முத்து போனை ஆட்டைய போட்டு அதை மனோஜின் கோட் பாக்கெட்டில் வைத்து விடுகிறார். ஆனால் இதில் இரண்டு விஷயங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

ஒன்று மனோஜ் அந்த போனை தொலைத்து ரோகினி பிளானை சொதப்பவும் வாய்ப்பிருக்கிறது. இல்லை என்றால் ரோகிணி கையில் அந்த போன் கிடைத்தாலும் முத்து அதை டெலிட் பண்ணி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. கடைசியில் ரோகினி இவ்வளவு பெரிய டிராமா பண்ணியும் ஏமாந்து போய் நின்றால் இந்த நாடகம் இன்னும் சூடு பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இதற்கு எதிர்மாறாக ரோகிணி கையில் அந்த வீடியோ கிடைத்துவிடும். அதை சிட்டி இடமும் கொடுத்துவிடுவார். சிட்டி சமூக வலைதளங்களில் போட்டு மீனாவின் தங்கை சீதாவிற்கு நடக்க இருக்கும் நிச்சயதார்த்தம் தடைப்பட்டுவிடும். இதனால் கோபமடைந்த சத்தியா, முத்துவிடம் சண்டை போடுவார். இதனை பார்த்து மீனா, முத்துவிடம் கோவப்பட வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் ரோகிணி கையில் கிடைத்திருக்கும் அந்த வீடியோவை வீட்டில் இருப்பவர்களிடம் குறும்படமாக போட்டு காட்டி மீனா குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விதமாக ரோகிணியும் தரமான சம்பவத்தை செய்யப்போகிறார். ஆக மொத்தத்தில் ரோகினி போட்ட பிளான் படி எல்லாம் நடந்து விடும்.

ஆனால் இதன் பிறகு தான் ரோகிணிக்கு மிகப்பெரிய ஆப்பு இருக்கிறது. அதாவது முத்து, இந்த வீடியோ எப்படி வெளியே போனது யார் மூலமாக போனது என்று கண்டறிந்து ரோகிணிக்கும் சிட்டிக்கும் என்ன சம்பந்தம் என்பதை தெரிந்து கொண்டு அடுத்தடுத்த விஷயங்களை வெளிய கொண்டுவர வாய்ப்பாக அமையப் போகிறது.

Trending News