Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவிற்கு உடம்பு சரி இல்லாததால் முத்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வருகிறார். அதே நேரத்தில் ரோகிணியின் மகன் கிரிஷ் விளையாடிக் கொண்டிருக்கும்போது தலையில் அடிபட்டு விட்டதால் ரோகிணியின் அம்மா அவனை அதே மருத்துவமனைக்கு கூட்டிட்டு வருகிறார்.
அப்பொழுது எதர்ச்சியாக இருவரும் சந்தித்த நிலையில் ரோகிணி அம்மா தனியாக கஷ்டப்படுவதால் முத்து மற்றும் மீனா உதவி செய்து வருகிறார்கள். அடுத்து கிரிஸ்க்கு அடிபட்டதை ரோகிணி அம்மா ரோகினிடம் போன் பண்ணி சொல்லுகிறார். இதைக் கேட்டு பதறிப் போய் துடித்து மனோஜிடம் மருத்துவமனையில் நம் ஷோரூம் பற்றி மார்க்கெட்டிங் பண்ணிட்டு வருகிறேன் என்று பொய் சொல்லி கிளம்பி விடுகிறார்.
மீனாவிற்காக சப்போர்ட் பண்ணும் ரோகினி
பிறகு மருத்துவமனைக்கு வந்த ரோகினி குழந்தைகள் இருக்கும் ஒவ்வொரு வார்டுலையும் போயி பார்த்து வருகிறார். அப்பொழுது முத்து மீனாவையும் பார்த்து விடுகிறார். உடனே முத்து நீங்க எங்க இங்க வந்தீங்க என்று கேட்க, மார்க்கெட்டிங் பண்ணுவதற்காக கடையிலிருந்து நான் வந்தேன் என்று சொல்லி முத்து மீனாவையும் சமாளித்து விடுகிறார்.
அடுத்து ரோகிணி மகனை பார்த்ததும் அத்தை வந்திருக்கிறேன் கண்விழித்துப் பாரு என்று வாய் கூசாமல் சொல்கிறார். அம்மாவாக இருக்கும் ரோகினி அத்தையாக தற்போது மாறிவிட்டார். இதனை அடுத்து ரோகிணி கிளம்பிய நிலையில் மீனா க்ரிஷ் மற்றும் ரோகினின் அம்மாவை விஜயா வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.
சும்மாவே விஜயா ருத்ரதாண்டவம் ஆடுவார், இதுல மீனா கூட்டிட்டு வர விருந்தாளிகளை எப்படி பேசுவார் என்று நன்றாகவே தெரியும். வாய்க்கு வந்தபடி திட்டிய நிலையில் அண்ணாமலை சமரசம் பண்ணி விட்டதால் விஜயா கொஞ்சம் அடங்கி போய்விட்டார். இந்த நிலையில் அவர்களை எங்க தூங்க வைப்பது என்று பஞ்சாயத்து போன நிலையில் ரோகிணி எங்க ரூமில் தூங்கிக் கொள்ளட்டும் என்று தாராள பிரபுவாக பேசுகிறார்.
இதனை எதிர்பார்க்காத முத்துவுக்கு கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அத்துடன் விஜயா வழக்கம்போல் அந்த குழந்தையும் அவருடைய அம்மாவையும் திட்டியதால் ரோகிணி கடுப்பாகிறார். இதனைத் தொடர்ந்து ரோகிணியின் மகன் மற்றும் அம்மாவை நல்லபடியாக மீனா கவனித்துக் கொண்டு வருகிறார். கூடிய விரைவில் க்ரிஷ் பற்றிய உண்மைகள் முத்துவுக்கு தெரியவரும்.
இருந்தாலும் இப்பொழுது ரோகிணியின் குடிமி முத்துவிடம் இருக்கிறது என்று சொல்வதற்கு ஏற்ப ரோகிணியின் அம்மா மற்றும் மகனை பார்க்கும் பொறுப்பில் முத்து மீனா இருக்கிறார்கள். இனி ஒவ்வொரு முறையும் விஜயா அவர்களை திட்டும் பொழுது ரோகினி வக்காலத்து வாங்குவார். இதனால் சீக்கிரமே ரோகிணி பற்றிய விஷயங்கள் தெரிய வர வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரம் விஜயாவிடம் வசமாக மாட்டிக் கொண்டு சின்ன பின்னமாக சிக்கித் தவிக்க போகிறார்.
சிறகடிக்கும் சீரியலில் சுவாரசியமான சம்பவங்கள்
- போட்ட பிளானில் சிக்கிய அண்ணாமலை
- மீனாவை அசிங்கப்படுத்தி பேசிய விஜயா
- முத்து எடுத்த அதிரடி முடிவு, வேலைக்காரியாக மாறும் ரோகினி