புதன்கிழமை, ஜனவரி 22, 2025

முதல் முறையாக வாய் திறந்து உண்மையை சொன்ன ரோகிணி.. ஸ்ருதி இடம் கெஞ்சும் மீனா, மன்னிப்பு கேட்ட முத்து

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் என்று விஜயா ரொம்பவே சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறார்.

ஆனால் ரோகிணி ஆஸ்பத்திரியில் செக்கப் பண்ணிட்டு வந்த பிறகு இது பித்த வாந்தி தான். நான் கர்ப்பமாக இல்லை என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்.

இதை கேட்டதும் விஜயா ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். பிறகு சுருதிக்கு போன் பண்ணி வீட்டுக்கு வா என்று கூப்பிடுகிறார். ஆனால் ஸ்ருதி என்னுடைய அப்பாவை அடித்த அந்த முத்து வீட்டுக்கு நான் வர விரும்பவில்லை. என்னை தயவு செய்து கூப்பிடாதீர்கள் என்று கூறிவிட்டார்.

இதற்கிடையில் ரோகினி கர்ப்பம் என்று விஜயா சொன்னதும் மனோஜ் மூஞ்சி ரொம்பவே சுருங்கி விட்டது. அத்துடன் ரோகினிடம் நமக்கு இப்பொழுது இந்த குழந்தை வேண்டாம் களச்சிடலாம் என்று சொல்கிறார்.

உடனே ரோகிணி என்ன மனோஜ் இப்படியெல்லாம் சொல்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு மனோஜ் இப்பொழுது நிலைமை சரியில்லை. நானும் வேலை இல்லாமல் சும்மாதான் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

இந்த நேரத்தில் நமக்கு ஒரு குழந்தை பிறந்தால் அது சரிப்பட்டு வராது. அதனால் தான் சொல்கிறேன் என்று ரோகினிடம் மனோஜ் கூறுகிறார்.

செண்டிமெண்ட் ஆக பேசும் மீனா

அந்த வகையில் ரோகினி உண்மையிலேயே கர்ப்பம் இல்லை என்று தெரிந்ததும் மனோஜ் ரொம்பவே சந்தோஷப்பட ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக சுருதி வீட்டிற்கு வர மாட்டார் என்று சொன்னதும் விஜயா இருக்க கோபத்தை மீனா மற்றும் முத்துவிடம் காட்டி பேசுகிறார்.

உடனே மீனா, இந்த பிரச்சனைக்கு நானே ஒரு முடிவு பண்ணுகிறேன் என்று முத்துவிடம் நீங்கள் ரவியை தனியாக சந்தித்து பேசி எப்படியாவது வீட்டிற்கு கூட்டிட்டு வாருங்கள்.

நான் சுருதியை பார்த்து பேசுகிறேன் என்று மீனாவும் கிளம்பிவிட்டார். அதன் பின் மீனா சுருதியிடம் கெஞ்சி செண்டிமெண்டாக பேசி வீட்டிற்கு வர வைக்கிறார்.

அதே மாதிரி முத்துவும் நான் அவசரப்பட்டு கை ஓங்கினது தவறுதான். ஆனால் உன்னுடைய மாமாவும் ரொம்ப கேவலமாக மீனாவையும் குடும்பத்தையும் பேசியதால்தான் கோபத்தில் அந்த மாதிரி பண்ணிட்டேன்.

என்னை மன்னித்துவிடு என்று ரவியிடம் மன்னிப்பு கேட்டு வீட்டிற்கு கூப்பிடுகிறார். ஆக மொத்தத்தில் மீனா முத்து இருவரும் சேர்ந்து ரவியையும் சுருதியையும் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுவார்கள்.

கடைசியில் சுருதியின் அப்பா அம்மா நினைத்தபடி எதுவும் நடக்காமல் தோற்றுப் போய் நிற்கப் போகிறார்கள்.

Trending News