வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விஜயாவிடம் இருந்து தப்பித்த ரோகிணி, க்ரிஷ் மூலம் வரும் சந்தேகம்.. உண்மையை கண்டுபிடிக்க போகும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவி ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ்க்கு வந்த மொட்டை கடிதாசி யார் என்று ரோகிணி மற்றும் விஜயா குழம்பி போய் இருக்கிறார்கள். ஆனால் மனோஜ் பதட்டத்தில் யாராக இருக்கும், நம் கூட இருப்பவர்கள் யார் என்னை ஏமாற்ற போகிறார்கள் என்ற சந்தேகத்தில் புலம்பி தவிக்கிறார். இன்னொரு பக்கம் முத்து போட்ட கண்டிஷன் படி மாதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

அதை வேற எப்படி கொடுப்பது என்று தெரியாமல் மனோஜ் முழித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் ரோகிணி அவருடைய மகன் கிருஷ்க்கு பிறந்தநாள் வருவதால் அவருக்கு டிரஸ் வாங்குவதற்காக கடைக்குப் போயிருக்கிறார். போனதும் என் மகனுக்கு பிறந்தநாள் வருகிறது. அவனுக்கு ஏழு வயது இருக்கும் அதற்கு ஏற்ற மாதிரி நல்ல கோட் சுட் கொண்டுட்டு வாங்கள் என்று கேட்கிறார்.

விஜயாவை பொய் சொல்லி ஏமாற்றிய ரோகினி

அதன்பின் கிருஷ்க்கு டிரஸ் எடுத்த நிலையில் அதை பில் போட கொடுத்து இருக்கிறார். அந்த நேரத்தில் விஜயா, பரதநாட்டியம் சொல்லிக் கொடுப்பதற்கு ஏற்ற டிரஸ் வாங்குவதற்காக தோழியை கூட்டிட்டு அதே கடைக்கு வந்து இருக்கிறார். அப்படி கடையில் டிரஸ் வாங்கிட்டு இருக்கும்போது ரோகிணியை பார்த்து விடுகிறார்.

உடனே விஜயா, ரோகினிடம் நீ என்ன இங்க வந்திருக்கிறாய். யாருக்கு டிரஸ் வாங்க வந்திருக்கிறார் என்று கேட்கிறார். அப்பொழுது கடையில் வேலை பார்ப்பவர், இந்தாங்க மேடம் உங்க மகனுக்கு கேட்ட டிரஸ் தயாராகி விட்டது என்று கொடுக்கிறார். இதை கேட்டதும் விஜயா குழப்பத்தில் என்ன மகன் என்று சொல்லிட்டு போகிறான் என்று ரோகினிடம் கேட்கிறார்.

அந்த வகையில் ரோகிணி மாட்டாமல் இருப்பதற்கு என்ன வேண்டுமானாலும் பொய் சொல்லி சமாளிக்க கூடியவர் தான். அதுவும் விஜயா போன்ற ஆளை சமாளிப்பது எல்லாம் பெரிய விஷயமே கிடையாது. என்னுடைய பிரண்டோட மகனுக்கு பிறந்தநாள் வருகிறது. அதற்கு தான் டிரஸ் வாங்க வந்தேன் என்று சொல்லி விஜயாவை ஏமாற்றி சமாளித்து விடுவார்.

விஜயாவும், ரோகிணி என்ன சொன்னாலும் தலையாட்டிக் கொண்டு நம்பி விடுவார். ஏனென்றால் பணக்கார மருமகள், கை நிறைய சம்பாதிக்கிறார் என்ற ஒரு விஷயம் ரோகிணியே விஜயா கண்மூடித்தனமாக நம்புகிறார். ஆனால் இதனை தொடர்ந்து க்ரிஷ்ன் பிறந்த நாளுக்கு ரோகிணி போவார். அங்கே எதிர்ச்சியாக முத்துவும் மீனாவும் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அப்படி போகிற பட்சத்தில் முத்துவுக்கு சந்தேகத்தை உண்டாக்கும் அளவிற்கு கல்யாணி கிரிஷ் இதைப் பற்றி ஒரு சின்ன விஷயங்கள் அவருக்கு தெரிய வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இதில் இருக்கும் உண்மை என்னவென்று கண்டுபிடிக்க முத்து முயற்சி எடுக்க போகிறார். எத்தனை நாள் தான் துரோகினையும் யாரிடமும் மாட்டாமல் தப்பித்துக் கொண்டே வருவார். அந்த வகையில் இனி வரும் எபிசோடுகளில் ரோகினி பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரப் போகிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News