Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஜீவாவிடம் இருந்து பணத்தை கைப்பற்றிய மனோஜ் மற்றும் ரோகினி தெனாவட்டாக வீட்டிற்கு வருகிறார்கள். வந்ததும் அப்பா பிசினஸ் பண்ணுவதற்காக பணம் அனுப்பி வைத்திருக்கிறார் என்று எல்லாரையும் நம்ப வைத்து விடுகிறார்.
ஆனால் முத்துக்கு மட்டும் சந்தேகம் இருப்பதால் எடக்கு மடக்கா கேள்வி கேட்டு வருகிறார். இதனை சமாளிக்க முடியாத ரோகினி எப்படியாவது முத்து வாயை அடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் இதை நேரடியாக முத்துவிடம் சொல்ல முடியாது. மீனாவை வைத்து முத்துவின் வாயை அடைக்கலாம் என்று ரோகினி பிளான் பண்ணி விட்டார்.
அதற்காக மீனாவை பார்த்து உங்க புருஷனை கொஞ்சம் அமைதியாக இருக்க சொல்லுங்க. ஏன் விஷயத்துல தலையிட வேண்டாம்னு சொல்லிடுங்க என்று வாய்க்கு வந்தபடி மீனாவிடம் சண்டை போடுகிறார். கொஞ்சம் கூட முத்துவை விட்டுக் கொடுக்காமல் மீனாவும் ரோகிணிக்கு பதிலடி கொடுக்கிறார்.
கேடித்தனமாக வில்லங்கத்தை பண்ணும் ரோகினி
ஆனாலும் ரோகினிக்கு குழாயடி சண்டை போடுவதும் எப்படி தில்லாலங்கடி வேலையை பார்ப்பதும் எல்லாமே கைவந்த கலை. அதனால் ரோகிணி, மீனாவை சீண்டிப் பார்த்து முத்துவிடம் பேச வைக்கிறார். ஆனால் முத்து எதற்கும் ஆசராமல் மீனாவை சமாதானப்படுத்தி விட்டு போய்விடுகிறார்.
பிறகு ரோகிணி பணம் வந்த விஷயத்தை தோழியிடம் சொல்கிறார். அந்த நேரத்தில் ரோகினி பார்த்து பணத்தை கேட்பதற்காக தினேஷ் வருகிறார். வந்ததும் எனக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் வேண்டும். இல்லை என்றால் உன்னை பற்றிய ரகசியம் குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லி விடுவேன் என்று பிளாக்மெயில் பண்ணுகிறார்.
அதனால் இவருடைய வாயை அடைப்பதற்காக ரோகினி, மனோஜிடமிருந்து ஒரு லட்ச ரூபாயை பறிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக மக்கு மனோஜை ஏமாற்றி பல தில்லாலங்கடி வேலையை பார்த்து ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டார். இப்படியே மொத்த பணத்தையும் இழப்பதற்குள் முத்துவிற்கு ஜீவா மூலம் உண்மை தெரிந்து பணத்தை ரோகினிடமிருந்து வாங்கி அண்ணாமலையிடம் கொண்டு போய் சேர்த்தால் இன்னும் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.