வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

முழு கிரிமினலாக மாறிய ரோகினி, சொகுசு வாழ்க்கைக்கு ஆப்பு வைக்க போகும் விஜயா.. முத்து மீனாவுக்கு நல்ல காலம் பிறந்தாச்சு

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், அண்ணாமலை சொன்னார் என்பதற்காக முத்து மற்றும் மீனா அவர்களுடைய வேலையை விட்டுவிட்டு மனோஜை ஏமாற்றிய கதிரை கண்டுபிடிப்பதற்கு முயற்சி எடுத்தார்கள். அதன்படி அந்தக் கதிரின் ஊரை கண்டுபிடித்து வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டார். உடனே உஷாராகிய ரோகிணி, இதுவரை நீங்கள் கண்டுபிடித்தது போதும் இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்.

அதற்கு காரணம் என்னவென்றால் முத்து அந்தக் கதிரை கண்டுபிடித்துவிட்டார் என்றால் கடைசிவரை இதை சொல்லிக்காட்டியே பேசுவார். அதோடு முத்து மூலமாக பணம் கிடைத்துவிட்டது என்றால் அந்த பணத்தில் இருந்து அவரும் பங்கு கேட்டு விடுவார். அதனால் நானே கண்டு பிடித்து விட்டால் என் மாமியாரின் கோபத்தை குறைப்பதற்கு வாய்ப்பு இருக்கும் என ரோகிணி, வித்யாவிடம் சொல்கிறார்.

அதற்கு வித்யா, அப்படி என்றால் அந்த கதிரை நீ எப்படி கண்டுபிடிக்க போகிறாய் என்று கேட்கிறார். உடனே ரோகிணி, சிட்டி மூலமாக கண்டுபிடிக்க போகிறேன் என்று சொல்லி சிட்டியை வரவழைத்து நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி கோவிலில் சிசிடிவி கேமராவின் வீடியோ வேணும். நீங்க தான் போயி அந்த கோவிலில் நிர்வாகிகளிடம் பேசி கொடுக்க வேண்டும் என்று ரோகிணி சொல்கிறார்.

உடனே சிட்டியும் சரி என்று சொல்லிய நிலையில் அதற்காக டீலிங் பேசுவதற்காக 60,000 ரூபாய் எனக்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு ரோகிணியின் சம்மதம் தெரிவித்த நிலையில் சிட்டி கோவில் அதிகாரியை சந்தித்து மீனா மற்றும் அவருடைய குடும்பத்தின் பெயரை சொல்லி அந்த வீடியோவை கேட்க ஆரம்பித்து விட்டார். இதற்கு இடையில் முத்துவுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் தம்பதிகளை சுற்றி காட்ட வேண்டும் என்று மூன்று நாள் ஆஃபர் வருகிறது.

அதன்படி முத்து அந்த தம்பதிகளை பிக்கப் பண்ணுகிறார். அப்பொழுது அவர்களிடம் முத்து மற்றும் மீனா நெருங்கி பேசுவதால் வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்கள். வந்ததும் அவர்கள் மலேசியாவில் இருந்து வந்திருக்கிறார்கள் என்று சொல்லி ரோகிணி அப்பாவை பற்றி விசாரிக்க போகிறார்கள். இதுதான் சரியான நேரம், ரோகிணியின் பகட்டு வாழ்க்கை கேள்விக்குறியாக மாறப்போகிறது.

ஏற்கனவே கிரிமினலாக இருக்கும் ரோகினி இனி முத்துவை குறி வைக்கும் விதமாக முழு கிரிமினலாக மாறப் போகிறார். ஆனாலும் என்ன தில்லாலங்கடி வேலை பார்த்தாலும் இனி ரோகினி எஸ்கேப் ஆக முடியாது. அத்துடன் ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு இல்லை என்று தெரிந்து விட்டால் விஜயா, சொகுசு வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் விதமாக ரோகினியை வேலைக்காரி போல தான் நடத்துவார்.

இதனை தொடர்ந்து முத்துவுக்கும் அடுத்தடுத்து பெரிய பெரிய ஆஃபர் வருவதால் டிரைவிங் ஸ்கூல் சொல்லிக் கொடுக்கும் ஆபீஸ் தொடங்கப் போகிறார். இதே மாதிரி மீனாவும் டெக்ரேசன் பண்ணும் பிசினஸில் இறங்கி விட்டார். இப்படி அடுத்தடுத்து முன்னேறி வரும் முத்து மற்றும் மீனாவிற்கு இனி நல்ல காலம் தான் என்பதற்கு ஏற்ப ஜெயிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Trending News