Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், எவ்வளவு பட்டாலும் இந்த மீனா கொஞ்சம் கூட மாறவே மாட்டார் என்பதற்கு ஏற்ப விஜயாவிடம் அசிங்கப்பட்டாலும் மறுபடியும் அத்தைன்னு போய் நிற்கிறதே வேலையா போச்சு. அப்படித்தான் விஜயா தெரியாத்தனமாக எண்ணெய் வழுகி விழுந்து அவஸ்தைப்படும் பொழுது மீனா, தோழிக்கு போன் பண்ணி என்ன மருந்து கொடுக்கலாம் என்று கேட்கிறார்.
அதன்படி ஒத்தனம் கொடுத்தால் சரியாகும் என்று சொல்கிறார். அதற்கு மீனா ஏற்பாடு செய்து அத்தை இடம் கொடுக்கலாம் என்று நினைக்கும் பொழுது முத்து வருகிறார். அப்பொழுது முத்து நீ போய் கொண்டு போனாலும் அதற்கு உன்ன தான் திட்டுவாங்க என்று அப்படியே விஜயாவை போல நடித்துக் காட்டி மீனாவிடம் போக வேண்டாம் என்று தடுத்தார்.
குடும்பத்தில் இருந்து மீனாவைப் பிரிக்க ரோகிணி போடும் திட்டம்
ஆனால் இதை கேட்காத மீனா, விஜயாவிடம் ஒத்தனத்தை கொடுத்தார். வழக்கம்போல் விஜயா அதை வாங்காமல் திட்டி அனுப்பி விட்டார். உடனே மீனா, அதை விஜயா பக்கத்தில் வைத்துவிட்டு தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். மறுபடியும் வேற மருந்து ரெடி பண்ணுவதற்காக தயாராகும் பொழுது கீழே விழும் அந்த நேரத்தில் முத்து காப்பாற்றி விடுகிறார்.
அங்கே போன விஜயா, சில சூழ்நிலையால் மேலே இருந்த சப்பாத்தி மாவு கொட்டி அதாலேயே குளித்து பேய் மாதிரி வந்து அனைவரையும் பயமுறுத்தி நிற்கிறார். பிறகு இதற்கும் காரணம் மீனாதான் என்று திட்டிய நிலையில் சுருதி மட்டும் விஜயாவின் முகத்தை பார்த்து சிரித்துக் கொண்டு அதை போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் வைக்க போறேன் என்று சொன்னார்.
பிறகு சுருதி சொன்னபடியே அதை ஸ்டேட்டஸில் வைத்து விட்டார். இதை பார்த்த ரோகினி, விஜயாவிடம் போட்டுக் கொடுக்கும் விதமாக சுருதி உங்களை எல்லாரும் முன்னாடியும் அசிங்கப்படுத்தி விட்டார். ஸ்டேட்டஸ் எல்லாரும் பார்ப்பார்கள், அத்துடன் உங்கள் நிலைமையை பார்த்து சிரித்து நக்கல் அடித்து பேசுவார்கள். இப்படி சுருதி பண்ணுவதற்கு எல்லாம் முக்கிய காரணம் பின்னாடி இருந்து மீனா ஏதோ சொல்லி இப்படி எல்லாம் பண்ண வைக்கிறார் என்று போட்டுக் கொடுக்கிறார்.
அதன் படி ரோகிணி உசுப்பேத்தியதால் கோபப்பட்ட விஜயா இதற்கு உடனே முடிவு கட்ட வேண்டும் என்று ரோகினியை கூட்டிட்டு விஜயாவின் தோழி பார்வதி வீட்டிற்கு போகிறார். அங்கே நடனமாடும் மாணவர்களுக்கு கொஞ்சம் பிரேக் கொடுத்துட்டு அப்புறம் ஆரம்பிக்கலாம் என்று சொல்லிய நிலையில் சுருதிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக சுருதி அம்மாவை வர வைக்கிறார்.
அங்கே ஸ்ருதி அம்மா வந்ததும், சுருதி பற்றி எல்லாத்தையும் சொல்லி கொஞ்சம் கண்டித்து வைங்க என கோபமாக பேசுகிறார். அத்துடன் ரோகிணியும் இதற்கெல்லாம் காரணம் மீனாதான் என்று சுருதி அம்மாவை உசுப்பேத்தி விட்டார். உடனே சுருதி அம்மா மீனாவை பார்த்து ரொம்பவே அசிங்கமாக பேசி திட்டி விட்டார். இதே கேள்விப்பட்ட முத்து நேரடியாக வீட்டிற்கு போய் சுருதியை பார்த்து சண்டை போடுகிறார்.
மேலும் மீனா, நீங்க அத்தையே போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போட்டதுக்கு உங்க அம்மா எதற்கு என்னை வந்து திட்டனும் என்று சொல்லி அங்கு ஒரு பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது. இப்படி கலவரமாக நடக்கும் விஷயத்தை எட்டி இருந்து பார்த்த விஜயா இப்பதான் மனசுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது என்று சந்தோசப்பட்டு கொள்கிறார். ஆனால் விஜயா மற்றும் ரோகிணி என்ன நினைத்தாலும் மீனா சுருதிக்குள் விரிசல் வருவதற்கு வாய்ப்புகள் கம்மிதான்.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- ஓவராக ஆட்டம் போட்ட மனோஜ் நடுத்தெருவுக்கு வரும் பரிதாபம்
- 74 சீரியல் மட்டமான கதையை போட்டு உடைக்கும் பரிதாபங்கள்
- சீதா வேலைக்கு ஆப்பு வைத்த ரோகினி, கெஞ்சிய மீனாவின் தங்கை