புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மக்கு மனோஜை தூண்டிவிட்டு ரணகளத்தை ஏற்படுத்தும் ரோகிணி.. பத்ரகாளியாக ருத்ர தாண்டவம் ஆடும் விஜயா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் விஜயா, ரோகினிக்கு கொடுத்த டார்ச்சரால் செட்டப் பண்ணிய மாமாவை வைத்து பொய்யான கதையை சொல்லி குடும்பத்தில் இருப்பவர்களை நம்ப வைக்கிறார். அதாவது ரோகினியின் அப்பா மலேசியாவில் பண்ணின பிசினஸை வேறு ஒருவர் பண மோசடி பண்ணி விட்டார்.

ஆனால் அந்த பழி கடைசியில் ரோகினி அப்பா மீது விழுந்து விட்டது. அதனால் இப்பொழுது அவர் ஜெயிலில் இருக்கிறார். நான் கூட யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக தான் இருக்கிறேன். அதனால் இப்போதைக்கு அவரால் எந்த உதவியும் பண்ண முடியாது. உங்களை வந்து நேரில் சந்திக்கவும் முடியாது என்று சொல்லிவிட்டார்.

இப்படி ரோகினி மாமாவாக நடிக்க வந்த மணி ஒவ்வொரு பொய்யாக சொல்ல சொல்ல ரோகினி நீலி கண்ணீர் வடித்து அங்கே இருப்பவர்களை ஏமாற்றுகிறார். இது தெரியாமல் மக்கு மனோஜ் ரோகிணியை சமாதானப்படுத்தி சப்போட்டாக பேசுகிறார். போதாதற்கு விஜயாவிடமும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி நடிக்கிறார்.

இதை எல்லாம் பார்த்த விஜயா ஆத்திரத்தில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் பத்திரகாளி ஆக ருத்ர தாண்டவம் ஆடி எல்லா கோபத்தையும் மீனாவிடம் காட்டுகிறார். நான் என்ன பண்ணினேன் என்னை ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று மீனா கேட்டதற்கு உன்னால் தான் எல்லா பிரச்சனையும் வந்தது. குபேரன் மாதிரி என் வீட்டிற்கு மருமகளாக வந்த ஸ்ருதி உன்னால தான் இப்பொழுது இந்த வீட்டுக்கு வராமல் இருக்கிறார்.

நீ மட்டும் இங்கே சந்தோஷமாக இருக்கிறாய் என்று விஜயா கொந்தளிக்கிறார். உடனே ரோகினியை பார்த்து இவளுடைய அப்பாவும் இப்பொழுது பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். அதனால் எல்லா செல்வமும் என்னை விட்டுப் போய்விட்டது என்று புலம ஆரம்பித்து விட்டார். பிறகு ரோகிணியை பார்த்து பேசுவதற்காக மனோஜ் பார்லருக்கு போகிறார்.

மனோஜை துடுப்புச்சிட்டாக பயன்படுத்தும் ரோகினி

போன இடத்தில் ரோகினிடம் பணத்தை கேட்கிறார். இதை கேட்டதும் கோபப்பட்ட ரோகினி ஏன் எல்லாரும் பணம் பணம் என்று என் உசுர வாங்குறீங்க. பணம் வேணும் என்றால் உங்க அம்மாவிடம் போய் கேளு. வீட்டு பத்திரத்தை வைத்து தானே முத்துக்கு கார் வாங்குவதற்கு பணம் கொடுத்தார்.

அதே மாதிரி உனக்கு பிசினஸ்க்கு பணம் வேணும் என்றால் உங்க அம்மாவிடம் இதே மாதிரி போய் கேளு. என்னை ஏன் தொந்தரவு பண்ணுகிறாய் என்று மக்கு மனோஜின் மூளையை சலவை செய்கிறார். இதனால் மனோஜும் இந்த மாதிரி ஒரு விஷயத்தை எடுத்து வீட்டில் ரணகளத்தை ஏற்படுத்த போகிறார்.

ரோகினி, விஜயாவிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒட்டுமொத்த குடும்பத்திற்கு எதிராக மனோஜை திசை திருப்பி விட்டார். இன்னும் என்னெல்லாம் பிரச்சனை ரோகிணியால் வரப்போகிறதோ தெரியவில்லை.

Trending News