புதன்கிழமை, டிசம்பர் 4, 2024

மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடி வாங்கும் ரோகிணி.. முத்துவிடம் சிக்கி சின்னா பின்னமாக போகும் கல்யாணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், தன்னுடைய பிசினஸில் முதல் கட்ட வெற்றியாக திருமண மண்டபத்தில் எடுத்திருக்கும் ஆர்டர் மூலம் மீனா மற்றும் முத்து சந்தோஷப்படுகிறார்கள். இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக குடும்பத்தில் இருப்பவர்களுக்கு, நண்பர்களுக்கு, தெரிந்தவர்களுக்கு என அனைவருக்கும் மீனா பிரியாணி சமைத்து கொடுக்க முடிவு பண்ணி இருக்கிறார்.

அதற்காக கறியை வாங்கும் பொழுது கசாப்பு கடையில் ரோகினியின் மாமா என பொய் சொல்லி நடிக்க வந்த பிரவுன் மணி இருக்கிறார். ஆனால் அவர் மீனாவை பார்த்ததும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக முகத்தை மறைத்துக் கொண்டு மீனாவிடம் கறியை கொடுத்து விடுகிறார். மீனாவும் கவனிக்காமல் அதை வாங்கிட்டு வந்து சமைத்து அனைவருக்கும் பிரியாணி விருந்தை கொடுத்து விடுகிறார்.

ஆனால் இதை மனோஜ் மற்றும் விஜயா மட்டும் சாப்பிட முடியாமல் ஜோசியர் சொன்னபடி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதற்காக விரதம் இருந்து கொண்டார்கள். அத்துடன் ரோகினி, வித்யாவின் வீட்டிற்கு போகிறார். அங்கே பிரவுன் மணி வந்து மீனா என்னுடைய கடைக்கு வந்து விட்டார். இருந்தாலும் உனக்கு ஒரு உதவி பண்ண வேண்டும் என்பதற்காக நான் பொய் சொல்லி நடிக்க வந்தேன்.

அந்த வகையில் உன்னை ஒருவிதத்தில் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மீனாவிடம் இருந்து தப்பித்து விட்டேன். அடுத்து அவர்களிடம் மாட்டிக் கொண்டால் என்னுடைய தொழிலையும் என்னையும் காப்பாற்றிக்கொள்ள நான் எல்லா உண்மையும் சொல்லி விடுவேன் என்று ரோகினிடம் மிரட்டி விட்டு போய்விட்டார். இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ரோகிணி, பிரவுன் மணியிடம் லாக் ஆகிவிட்டார்.

அதேபோல ரோகினியின் ரகசியங்களை PA மூலம் சிட்டி தெரிந்து கொண்டார். இதனால் இந்த ஒரு ரகசியங்களை வைத்து ரோகினியை பிளாக்மெயில் பண்ணி பணம் பறிக்கலாம் என்று இவர்கள் இருவரும் சேர்ந்து திட்டமிட்டார்கள். அந்த வகையில் ரோகிணி தற்போது இரண்டு பக்கமும் மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டு வருகிறார். இத்தனை நாளாக அட்டூழியத்தையும் அராஜகத்தையும் பண்ணிவந்த ரோகிணி கூடிய விரைவில் முத்துமிடம் கையும் களவுமாக சிக்க போகிறார்.

அதற்கு அச்சாணியாக தான் சிட்டி மற்றும் பிரவுன் மணி மூலம் ரோகிணிக்கு செக் வைக்கப்பட்டிருக்கிறது. இத்தனை நாளாக ரோகிணியை தலையில் வைத்து ஆடிய விஜயாவிற்கு உண்மை தெரிய வரும் பொழுது தான் விஜயாவின் மொத்த ஆணவமும் அடங்கப் போகிறது. இன்னும் கூடிய விரைவில் கல்யாணி, ரோகிணி ஆள்மாறாட்டம் பண்ணி தில்லு முல்லு வேலை பார்க்கும் விஷயங்கள் எல்லாம் வெளிய வரப்போகிறது.

- Advertisement -spot_img

Trending News