வியாழக்கிழமை, மார்ச் 6, 2025

முத்து கையில் இருக்கும் ரோகினியின் அஸ்திவாரம்.. வேலைக்காரியாக இருந்த மீனாவுக்கு விஜயா மீது வந்த கோபம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பொய்யும் பித்தலாட்டமும் பண்ணிவரும் ரோகிணியின் ரகசியங்கள் அனைத்தும் மறைக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டு காதல் கதையை வைத்து ட்ராக் மாறிக்கொண்டு வருகிறது. அதில் ரோகினியின் தோழியாக இருக்கும் வித்தியா மற்றும் மீனாவை பார்த்ததும் பின்னாடியே போய் காதலை சொன்ன முருகனுக்கும் தற்போது காதல் வந்துவிட்டது.

இவர்களுடைய காதலுக்கு தூதுவாக மீனா மறைமுகமாக வேலை பார்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது வித்யா மற்றும் முருகன் இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள். இவர்களுடைய காதலை உறுதிப்படுத்தும் விதமாக கோவிலுக்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதே கோவிலுக்கு மீனாவின் தங்கை சீதாவும் முத்துவிடம் வம்பு பண்ணிய டிராபிக் போலீஸ் அருனும் வருகிறார்கள்.

அந்த வகையில் இவர்கள் இருவருடைய காதல் டிராக் இடையில் வருவதால் ரோகிணி, ஒவ்வொரு விஷயங்களிலும் எஸ்கேப் கொண்டு வருகிறார். ஆனால் இதை எல்லாம் தாண்டி இன்னொரு விஷயமாக பரசுராமனின் மகளுக்கும் ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த கசாப்பு கடை மணி அண்ணன் மகனுக்கும் காதல் கல்யாணம் நடக்கப்போகிறது.

இதை முன்னணியில் இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணுவது கசாப்பு கடை மணி மற்றும் முத்து தான். அந்த வகையில் இந்த கல்யாணம் மூலமாவது ரோகிணி மலேசியா பொண்ணு கிடையாது. நானும் ரோகிணியின் மாமா கிடையாது என்ற உண்மை தெரிய வருமா என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி இன்னொரு விஷயம் ரோகிணியின் அஸ்திவாரமே முத்து கையில் தான் இருக்கிறது. ஆனால் அதை மறந்து முத்து சுற்றிக் கொண்டிருக்கிறார். அதாவது ரோகிணி வைத்திருக்கும் பார்லருக்கு உரிமையாளர் ரோகிணி தான் என்று ஒட்டுமொத்த குடும்பமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் மனோஜும் விஜயாவும் ஓவராக ரோகிணியை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள்.

ஆனால் இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக முத்துவுக்கு தெரிந்த உண்மை வெளிவந்தால் நன்றாக இருக்கும். அதாவது ரோகினி வைத்திருக்கும் பார்லர் அவருடையது கிடையாது. அதில் வேலை பார்க்கும் ஒரு வேலைக்காரி தான் என்பது முத்துவுக்கு மட்டும் தெரியும். ஆனால் முத்து இந்த விஷயத்தை ஏற்கனவே அண்ணாமலையிடம் சொல்லி இருக்கிறார். அண்ணாமலை இப்போதைக்கு குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று மறைக்க சொல்லி விட்டார்.

அதன்படி முத்துவும் இந்த விஷயத்தை மீனாவிடம் கூட சொல்லாமல் கமுக்கமாக வைத்திருக்கிறார். அட்லீஸ்ட் இந்த விஷயமாவது முத்து வெளியே சொன்னால் மனோஜ் மற்றும் விஜயாவுக்கு ரோகினி நம்மிடமிருந்து பல விஷயங்களை மறைத்துக் கொண்டு வருகிறார் என்ற ஒரு எண்ணம் தோன்ற காரணமாக இருக்கும். இப்படி ஒரு விஷயம் இல்லவே இல்லை என்பதற்கு ஏற்ப கதை நகர்ந்து கொண்டு வருகிறது.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த ஸ்ருதியின் அம்மா முத்துவை அசிங்கப்படுத்தி பேசும் பொழுது கூடவே விஜயாவும் ஜால்ரா அடித்ததால் இதுவரை வேலைக்காரியாக இருந்த மீனாவுக்கு திடீரென்று கோபம் வந்துவிட்டது. அந்த வகையில் முத்துவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக சுருதி அம்மாவையும் விஜயாவையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். ஆனால் இதே கோபத்துடன் எல்லா விஷயத்திலும் சூடு சொரணையுடன் இருந்தால் அட்லீஸ்ட் குடும்பத்திற்குள் மீனாவுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பாவது கிடைக்கும்.

Trending News