செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

முத்துவின் சுயநினைவை மறக்கடிப்பதற்கு ரோகிணி போட்ட பிளான்.. மனோஜ் பங்க்ஷனில் நடக்கப் போகும் அசம்பாவிதம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி மற்றும் மனோஜின் கல்யாண நாள் மற்றும் ஷோரூம் ஓபன் பண்ணி 100 நாள் ஆனதை கொண்டாடும் விதமாக மனோஜ் ஒரு பிரம்மாண்டமான ஏற்பாடு பண்ணியிருக்கிறார். அத்துடன் இந்த ஃபங்ஷனுக்கு டீலர்ஷிப் கொடுக்கக்கூடிய ஒரு நபர் வருவதால் அவர் முன்னாடி கெத்தாக குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரையும் பணக்கார தோரணையுடன் ரோகிணி மாற்றி இருக்கிறார்.

அதனால் ஒவ்வொருவரும் பொய் சொல்லிக்கொண்டு அந்த பங்க்ஷன்க்கு வந்து விடுகிறார்கள். இது எதுவும் தெரியாத அண்ணாமலை, மனோஜின் முதலாளிக்காக இந்த ஒரு பங்க்ஷனை ஏற்பாடு பண்ணி இருக்கிறார்கள் என்பதால் மட்டும் வந்திருக்கிறார். இதனை அடுத்து அந்த பங்க்ஷன்க்கு வந்த மனோஜின் முதலாளி ஒவ்வொருவரையும் பார்த்து பேசுகிறார்.

அப்பொழுது மனோஜ், முத்துவை அறிமுகப்படுத்திய நிலையில் முத்துவும் மனோஜ் சொன்ன பொய்க்கு ஏற்ற மாதிரி வாய்க்கு வந்தபடி எல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி விட்டார். கடைசியில் மனோஜ் முதலாளி எல்லாத்தையும் நம்பி என்னுடைய அடுத்து எல்லா டீலர்ஷிப்பும் மனோஜ்க்கு தான் கொடுப்பேன் என்று வாக்கு கொடுத்து விட்டு போய்விட்டார்.

இதனால் ஒட்டுமொத்தமாக சந்தோஷப்பட்ட மனோஜ் மற்றும் ரோகினி கேக் வெட்டி கொண்டாடி அங்கு இருப்பவர்களிடம் சந்தோசமாக இருக்கிறார்கள். ஆனாலும் ரோகிணி இந்த ஃபங்ஷனில் எப்படியாவது முத்துவிடம் இருக்கும் வீடியோவை எடுத்து விட வேண்டும் என்று தோழி வித்தியாவிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

அத்துடன் இந்த பங்க்ஷன் நல்லபடியாக முடிந்ததை ஒட்டி பார்ட்டி வைப்பதற்காக மனோஜின் நம்பர் மது பாட்டிலை கொண்டு வந்திருக்கிறார். இதை பார்த்து சந்தோஷப்பட்ட முத்து இன்னைக்கு செம பார்ட்டி இருக்கிறது என்று சொல்லிக்கிறார். ஆனால் இதை எல்லாம் பார்த்த மீனா, நீங்கள் குடிக்க கூடாது என்று முத்துவிடம் சொல்லி இருக்கிறார்.

இருந்தாலும் ரோகினியின் பிளானை இதுதான். அதாவது இந்த பங்க்ஷனில் முத்து கண்ணுமுன்னு தெரியாமல் குடித்து விட்டு முத்துவின் சுயநினைவை மறக்கடித்த பிறகு அவரிடம் இருக்கும் போனை எடுத்து அதில் சத்யா பற்றிய வீடியோக்களையும் ஈசியாக எடுத்து விடலாம் என்று பிளான் பண்ணி வைத்திருக்கிறார்.

இதனால் மீனா, முத்துவிடம் குடிக்க கூடாது என்று சொன்னாலும் ரோகிணி மற்றும் அனைவரும் சேர்ந்து மீனாவை சமரசம் செய்து முத்து குடிப்பதற்கு சம்மதத்தை வாங்கி விடுவார்கள். பிறகு அண்ணன் தம்பிகள் அனைவரும் சேர்ந்து அந்த ஃபங்க்ஷனை கொண்டாடும் விதமாக குடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதன் பிறகு ரோகிணி, முத்து போனில் இருக்கும் வீடியோவை எடுத்து விடுவார்.

காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அந்த வீடியோ எல்லா பக்கமும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவிடும். இதனால் மீனா குடும்பத்திற்கு மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மனோஜ் பங்க்ஷனால் எதிர்பார்க்காத பிரச்சனையும் பூகம்பமும் வெடிக்கப் போகிறது. தன்னுடைய சந்தோஷத்திற்காக மற்றவர்களை பலியாடாக ஆக்குவது ரோகினிக்கு கைவந்த கலை. இந்த முறை எப்படியாவது வீடியோவை எடுத்து விட வேண்டும் என்று ரோகினி பக்காவாக பிளான் போட்டு விட்டார்.

Trending News