திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

6 வருடங்கள் கழித்து காதலனை கரம் பிடித்த ரோஜா சீரியல் பிரியங்கா.. ட்ரெண்டாகும் போட்டோஸ்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் ரோஜா. இதில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் சிபு சூரியனும், ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரியும் நடித்து வந்தனர்.

சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவு பெற்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா 2 தொடரில் சிபு கதாநாயகனாக நடித்து வருகிறார். அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரில் கதாநாயகியாக பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார்.

Also Read : எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 14 வருடங்களுக்கு பின் வெளிவர உள்ள 2ம் பாகம்

இந்நிலையில் திடீரென பிரியங்கா நல்காரிக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கு சீரியல் நடிகர் ராகுல் என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது.

roja-priyanka-nalkari

மேலும் பிரியங்கா நல்காரியும் இதுகுறித்து பல பேட்டிகளில் பேசி இருந்தார். அதாவது எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான், ஆனால் சில காரணங்களினால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. நான் ராகுலை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை என வேதனையுடன் கூறி இருந்தார்.

priyanka-nalkari-marriage

Also Read : ஜெயம் ரவிக்காக நடையாய் நடக்கும் மாமியார்.. திரும்பி கூட பார்க்காத சன் டிவி

இப்போது நிச்சயதார்த்தம் முடிந்து கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு ராகுலை பிரியங்கா நல்காரி திருமணம் செய்து கொண்டுள்ளார். மிக எளிய முறையில் கோயிலில் இவர்கள திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பிரியங்கா நல்காரி வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.

priyanka-nalkari

Also Read : 24 வருட உறவை தூக்கி எறிந்த சன் டிவி.. ராதிகாவை தொக்கா தூக்கியா பிரபல சேனல்

Trending News