புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரோமியோ, டியர் முதல் நாள் கலெக்ஷன்.. ஜிவி பிரகாஷை முந்தினாரா விஜய் ஆண்டனி?

GV Prakash, Vijay Antony : ரம்ஜான் பண்டிகை மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தேர்தலை கருத்தில் கொண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஏப்ரல் மாதத்திற்கு பின் தான் வெளியாகிறது.

அந்த வகையில் விஜய் ஆண்டனி ரோமியோ மற்றும் ஜிவி பிரகாஷ் டியர் படம் வெளியாகி இருக்கிறது. ரோமியோ படம் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோரின் நடிப்பில் ரொமான்டிக் கலந்த காமெடி படமாக வெளியாகி இருக்கிறது.

விஜய் ஆண்டனி வித்யாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்தாலும் ஒரு முறை பார்த்தால் அலுப்பு தட்டும் படி தான் அமைந்திருக்கிறது. அதேபோல் ஜிவி பிரகாஷுக்கு இந்த மாதம் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு படம் வெளியாகி வருகிறது.

ரோமியோ, டியர் முதல் நாள் கலெக்சன்

அவ்வாறு ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் டியர் படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தின் டிரைலர் குட் நைட் சாயலில் இருப்பதாக விமர்சனங்கள் இருந்தது. ஆகையால் முதல் நாளே படத்திற்கு சற்று கூட்டம் குறைவாகத்தான் வந்திருந்தனர்.

அதன்படி டியர் படம் முதல் நாளில் வெறும் 50 லட்சம் மட்டுமே வசூல் செய்திருக்கிறது. முதல் நாளே இவ்வளவு குறைவு என்பதால் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் எந்த அளவுக்கு இருக்கும் என்பது சந்தேகம் தான்.

மேலும் டியர் படத்தை முந்தி விஜய் ஆண்டனியின் ரோமியோ படம் கிட்டத்தட்ட ஒரு கோடி வசூல் செய்திருக்கிறது. அடுத்தடுத்து சனி, ஞாயிறு, தமிழ் புத்தாண்டு ஆகிய நாட்கள் விடுமுறை என்பதால் கலெக்ஷனை அள்ளுகிறதா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Trending News