ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அங்காடித்தெரு மகேஷ்க்கு நடந்த சோகம்.. வதந்தியால் நடந்த கொடுமை

அங்காடி தெரு படத்தின் மூலம் தனக்கென்று சினிமா துறையில் ஒரு பெயரை எடுத்தவர் நடிகர் மகேஷ். கிராமத்து பையனாக, தத்ரூபமான நடிப்பை அந்தப் படத்தில் வெளிப்படுத்தி அனைவரின் மனதையும் வென்றார். நடிப்பிலும் அசத்தினார்.

எளிய குடும்பத்தில் பிறந்த மகேஷின் அப்பா தள்ளுவண்டியில் பட்டாணி விற்கும் வேலை செய்பவர். அப்பாவின் கடையில் உதவி செஞ்ச மகேசை பார்த்த வசந்தபாலன், அங்காடி தெரு படத்தின் மூலம் நடிகராக்கினார்.

அந்தப் படத்திற்கு பின், சில படங்களில் மகேஷ் தலை காட்டினாலும் பல படங்களின் வாய்ப்புகள் பறிபோனது. அதற்கு காரணம் அங்காடித்தெரு படத்தின் வெற்றியின் பொறாமையால் பலர் அவருக்கு கொடுமைகள் செய்து ஏமாற்றி உள்ளனர்.

அந்த படத்தின் வெற்றிக்கு பின், அவர் பல இளம் பெண்களை அவர் வலையில் விழ வைத்ததாக பயில்வான் ரங்கநாதன் கிளப்பிவிட்டார். ஆனால் விசாரித்ததில் அதெல்லாம் கப்சாவாம்.

ரங்கநாதன் அவிழ்த்துவிட்ட புளுகு மூட்டையில் அவர் மட்டும் நல்லா கல்லா கட்டுகிறார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்ப ரங்கநாதன் ஒருநாள் மாட்டுவார்.

Trending News