புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ராஜமவுலி ஜெயிப்பாரா, ஆர்ஆர்ஆர் படம் எப்படி இருக்கு.? ட்விட்டரில் வெளிவந்த தரமான விமர்சனம்

பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உருவாக்கியிருக்கும் திரைப்படம் ஆர்ஆர்ஆர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக இப்படம் வெளியாகி இருக்கிறது.

சுமார் 500 கோடி பட்ஜெட்டில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களும், திரை பிரபலங்களும் தற்போது இப்படம் பற்றிய தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

rrr-review
rrr-review

சுதந்திர போராட்ட வீரர்களான சீதா ராமராஜூ, கொமராம் பீம் இவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இரண்டு பெரிய மாஸ் ஹீரோக்களை வைத்து பல நம்ப முடியாத உணர்ச்சி பூர்வமான காட்சிகளை கொண்டிருக்கும் இப்படம் ரசிகர்களுக்கு முழு நிறைவாக அமைந்துள்ளது.

RRR
RRR

மேலும் ராஜமௌலி இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்துள்ளார். படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியையும் அவர் மிகவும் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் செய்துள்ளார். ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடிப்பு அபாரமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தற்போது படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.

RRR
RRR

மேலும் சிவகார்த்திகேயன், நானி, சிரஞ்சீவி உட்பட பல திரை பிரபலங்களும் படக்குழுவினர் அனைவருக்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் படத்தில் இடம்பெற்றுள்ள கிளைமாக்ஸ் காட்சி வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

RRR
RRR

திரையரங்குகளில் பல பெரிய கட்டவுட் வைத்து இந்த படத்தை கொண்டாடி வரும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜமவுலி அனைவரின் எதிர்பார்ப்பையும் ஏமாற்றாமல் நிறைவு செய்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

RRR
RRR

Trending News