பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இப்படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் பான் இந்தியத் திரைப்படமாக வெளியானது. ஆர் ஆர் ஆர் படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்து தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
இந்நிலையில் நேற்று ஆர்ஆர்ஆர் படம் வெளியாகியுள்ளது. ராஜமவுலியின் பாகுபலி 2 படம் அளவிற்கு இல்லை என்றாலும் ஆர்ஆர்ஆர் படம் நன்றாக இருக்கிறது என்ற விமர்சனங்களே வருகிறது. இப்படத்தின் முதல்நாள் உலகளாவிய வசூல் மட்டும் 228 கோடி ஆகும்.
தெலுங்கில் மட்டும் ஆர்ஆர்ஆர் படம் 107.2 கோடி வசூலாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆக ஏராளமான ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்தனர். மேலும் வார இறுதி நாட்களில் ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் உயர வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் ஆர்ஆர்ஆர் படம் 69.1 கோடி வசூல் செய்துள்ளது. ஹிந்தி வட்டாரங்களில் டிக்கெட் விலை உயர்ந்ததால் ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் அங்கு சற்று குறைவாகத்தான் உள்ளது. ஹிந்தியில் 22.6 கோடி வசூல் செய்துள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா போன்ற சில இடங்களில் ஆர்ஆர்ஆர் படம் நல்ல வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 16.4 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் தெலுங்கு நடிகர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஆர்ஆர்ஆர் படம் 9.20 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
கேரளா சுற்றுவட்டாரத்தில் இப்படம் 4.01 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தம் இந்த படத்தின் பட்ஜெட் என்று பார்த்தால் 550 கோடி, இந்த மொத்த செலவையும் மூன்றே நாளில் எடுத்து விடுவார்கள் போல என்கிறது கோலிவுட் வட்டாரம். கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகி அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை ஆர்ஆர்ஆர் படம் பெற்றுள்ளது . இன்னும் விடுமுறை நாட்களில் ஆர்ஆர்ஆர் படம் அதிக வசூல் பெற வாய்ப்புள்ளது.