சௌந்தர்யாவை வீட்டை விட்டு துரத்திய ருக்மணி.. தனத்தை தாக்கிய ராதிகா!

தனம் சீரியலில் தன் திருமணத்திலிருந்து தப்பிய சௌந்தர்யாவை தனம் நிலாவின் மாமாவின் உதவியுடன் திவாகரிடம் இருந்து காப்பாற்றி அழைத்து வருகிறாள். சௌந்தர்யாவின் அம்மா ருக்மணி சௌந்தர்யாவை பார்த்து டேய் அங்கேயே நில்லுடி எப்போ நீ இந்த வீட்ட விட்டு வெளியே போனியா அப்பவே இந்த வீட்டிற்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கிறாள்.

உடனே தனம் ருக்குமணியை சமாதானம் படுத்தி சௌந்தர்யாவை வீட்டிற்குள் அழைத்து செல்கிறாள். EMI கட்டணும்னு ஷாலினி கவலையில் இருந்த சமயம் கவலைபடாதே வீட்டுக்கு நான் EMI கட்டினேனு தானம் சொன்ன சமயத்தில் நிலா
குட்டியிடமிருந்து தனத்திற்கு போன் வருகிறது.

கொஞ்சம் வீட்டிற்கு வாங்க எங்க அப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரில்லைனு சொல்றாள். உடனே தனம் ஷாலினியை அழைச்சிட்டு நிலா வீட்டுக்கு போகிறாள். அந்நேரம் மரகதம் ருக்குமணி கிட்ட தனத்தை பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்றாள். ருக்மணி தனம் என்ன செஞ்சாலும் ஒரு நியாயம் இருக்கும். நீ இதில் தலையிடாதே என்று திட்டுகிறாள்.

நிலா வீட்டுக்கு தனம் சென்றவுடன் ராதிகா உங்களால எங்க மாமாவுக்கு கையில் அடிபட்டுருக்கு உங்க வீட்டு பிரச்சினையை நீங்க பார்க்க வேண்டியதுதானே எதுக்கு எங்க மாமாவை கூப்பிட்டீங்கனு சண்டை போடுகிறாள்.

நிலா வீட்டிற்கு போனதற்கு மரகதம் தனத்தை திட்டியதால் மரகதம் ருக்குமணி இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்படுகிறது. ருக்குமணி தனத்தை பார்த்து நீ மரகதம் பேசியதை தப்பா நினைக்காதே. நான் உன் உருவத்தில் என் மகன்தான் இந்த வீட்டில் இருக்கிறானு நினைக்கிறேன் என்று ஆறுதல் கூறினாள்.

இன்றயை எபிசொட் சொல்ற அளவுக்கு ஒன்னும் இல்லை. இனிவரும் எபிசொட் எப்படி இருக்குனு பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →