25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இருப்பவர், யுவன் சங்கர் ராஜா. லிட்டில் மேஸ்ட்ரோ, யங் மேஸ்ட்ரோ, பிஜிஎம் கிங் எனப் பல பெயரால் ரசிகர்களை இவரை செல்லமாக அழைக்கிறார்கள். தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் இல்லாமல், இசையின் மொழி புரிந்த பலருக்கும் தனிமையில் துணையாக இருந்து அவர்களின் துயர் துடைப்பவராக இருக்கின்றார்.
1996-ல் தமிழில் வெளியான அரவிந்தன் படத்தில் தொடங்கி தற்போது வரை 170க்கும் மேற்பட்ட படங்களில் இவரது இசைப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர் பாடல்கள் பெரும்பாலானவை 2கே ஆரம்பகட்டத்தில் இளைஞர்களின் மனதை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது. இசைஞானி இளையராஜாவின் (Ilayaraaja) மகன் என்பதால் மட்டும் யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் கால் பதிக்கவில்லை. தனது திறமையால் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.
இந்நிலையில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துவது குறித்த ஒரு மீட்டிங்கிறாக வந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொன்னார், யுவன். இந்த நிலையில் இசைஞானி இளையராஜா தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
காப்புரிமை விவகாரத்தைப் பொறுத்தவரை, அப்பா-பயனாகவே இருந்தாலும், ரூல்ஸ் ரூல்ஸ் தான். சில பாடல்கள், சில லேபிளின் கீழ் இருக்கும். அதைப் பேசி அனுமதி வாங்கியபின், என் அப்பாவின் பாடல்களையே நான் பயன்படுத்தமுடியும். இப்போது காப்புரிமை விவகாரத்தில் நிறைய விழிப்புணர்வு வந்திருச்சு. அது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன்.
பழைய பாடல்களை மாற்றி, கொஞ்சம் புதுப் பாடல்களில் போடுவது என்பது அதை சிதைப்பதாக கருதமுடியாது. பழைய பாடலின் இன்னொரு வடிவமாகத்தான் அதை நான் பார்க்கிறேன், என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை கேட்ட நெட்டிசன்கள், பரவா இல்லையே.. மகனாக இருந்தாலும் ரூல்ஸ் விஷயத்தில் கறாராக இருக்கிறாரே இசைஞானி என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் அடுத்ததாக விஜய் கட்சிக்காக பாடல்களை உருவாக்க தான் ஆர்வமாக இருப்பதாகவும் சிக்னல் கொடுத்திருக்கிறார். விஜய் இவரை சரியாக பயன்படுத்திக்கொள்வாரா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.