வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆளும் கட்சியை அலறவிட்ட விஜய்.. கேப்டன் போல விஜய் வீடு இடிக்கப்படுமா.? தளபதிக்கு செக்

Vijay: விஜய்யின் அரசியல் நகர்வுகள் தற்போது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் அவர் பேசிய ஒரு விஷயமும் தற்போது கடும் விவாதத்திற்கு ஆ.

அதேபோல் ஒன்றிய அரசு என குறிப்பிட்ட அந்த வார்த்தை ஆளும் கட்சியையும் கடுப்பாக்கி இருக்கிறது. மேலும் நீட் தேர்வுக்கு எதிராக அவர் பேசியதும் தேசிய அளவில் வைரலானது.

இதனால் மத்திய ஆளும் கட்சியின் பார்வை விஜய் மீது அழுத்தமாக படியும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் கள்ளக்குறிச்சி விவாகரத்தில் தமிழக அரசை எதிர்த்து விஜய் தன் கருத்தை ஆணித்தரமாக முன் வைத்தார்.

அதன் காரணமாக மத்திய, மாநில அரசு இவருக்கு செக் வைக்கலாம் என்ற தகவல்களும் கசிந்துள்ளது. அதிலும் யூடியூப் பிரபலம் மாரிதாஸ் கூறிய ஒரு விஷயம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய்க்கு செக் வைக்கும் கட்சிகள்

அதாவது விஜய் திமுக அரசை எதிர்த்து அரசியல் செய்யப் போகிறார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது. ஆனால் தங்களை எதிர்த்தால் விஜய்யின் வீடு எடுக்கப்படும் என ஆளும் கட்சி தரப்பிலிருந்து மிரட்டல் வந்திருக்கும்.

அதனால் தான் நீட் தேர்வு பற்றி பேசிய அவர் அதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட தமிழக சட்டமன்ற தீர்மானத்தை வரவேற்கிறேன் என கூறியதாக மாரிதாஸ் தெரிவித்துள்ளார். அப்படி இல்லை என்றால் கேப்டனின் திருமண மண்டபத்தை இடித்தது போல் விஜய்யின் நீலாங்கரை வீடு இடிக்கப்பட்டிருக்கும் என பீதியை கிளப்பியுள்ளார்.

ஆனால் உண்மையில் இதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு கிடையாது. விஜய் தன்னுடைய இலக்கை நோக்கி தெளிவாக முன்னேறி கொண்டிருக்கிறார். யாரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதையும் அவர் தெரிந்து வைத்துள்ளார்.

அதே போல் அவருடைய சமீப கால நடவடிக்கையால் அவருக்கு பின்னால் கூட்டமும் சேர ஆரம்பித்துள்ளது. அதனாலேயே தற்போது அவருக்கு பயம் காட்டும் விஷயங்களும் நடக்க வாய்ப்பிருக்கிறது. இதைத்தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

ஆளும் கட்சிக்கு எதிராக விஜய் செய்யும் அரசியல்

Trending News