திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிரபாஸ் படத்திற்கு கிளம்பும் வதந்திகள்.. அதிரடியாக ரிலீஸ் தேதியை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திய படக்குழு

பிரபாஸ் நடித்திருக்கும் படத்திற்கு பல வதந்திகள் சோசியல் மீடியாவில் கிளம்புகிறது. இதில் எது உண்மை, எது பொய் என தெரியாமல் ரசிகர்கள் குழம்புகின்றனர். இதற்கெல்லாம் தீர்வாக தற்போது படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி உள்ளது.

ஏனென்றால் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாததால் ரிலீஸ் தேதிகள் மாற்றம் ஏற்படும் என்றும், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இயக்குனர் பிரசாந்த் நீல் திட்டமிட்டுள்ளதாகவும் பல வதந்திகள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Also Read: 84 ஏக்கரில் பிரபாஸின் பண்ணை வீடு.. வாயை பிளக்க வைக்கும் மொத்த சொத்து மதிப்பு

பாகுபலி 2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்ததால் அடுத்ததாக இவர் மலைபோல் நம்பி இருக்கும் படம்தான் சலார். இந்த படத்தை கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். பிரபாஸ் இதில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார்.

இவருடன் ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். சுமார் 400 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் இந்த படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.

Also Read: ராவணனின் கர்வத்தை முறியடிக்கும் ராமன்.. பிரம்மாண்ட கிராபிக்ஸ், பிரபாஸின் மிரட்டும் ஆதிபுருஷ் ட்ரெய்லர்

இந்நிலையில் சலார் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாததால் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் படக்குழு என்ற தகவலை மறுத்து சலார் வெளியிட்டு தேதியை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.

அது மட்டுமல்ல வெளியிட்டு தேதியில் எந்தவித மாற்றம் இல்லை என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் படக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மறுபுறம் இந்த படத்தின் ஓவர்சீஸ் உரிமை மட்டும் ரூபாய் 90 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: நம்ம நடிகர்களை ஓரம் கட்ட வரும் 5 அக்கட தேசத்து ஹீரோக்கள்.. ரசிகர்களைக் கவர்ந்த அல்லு அர்ஜுன்

Trending News