செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

Suriya : சூர்யா, ஜோதிகா பிரிந்து வாழ்கிறார்களா.? பயில்வானுக்கு தரமான பதிலடி!

சமீபத்தில் ஜோதிகா மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார் என்ற செய்தி வெளியானது. ஆனால் சூர்யா தனது மகனுடன் சென்னையில் தான் வசித்து வந்த நிலையில் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என சிலர் கொளுத்தி போட்டிருந்தனர்.

அதில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் அவர்களும் சூர்யா, ஜோதிகா இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறியிருந்தார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோதிகா இப்போது பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.

தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி உள்ள ஜோதிகா ஊடகம் ஒன்றில் பேசும் போது சூர்யாவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதாவது இருவருமே படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் போது தாங்கள் பிரிந்து விட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜோதிகா

இதே போல் வேண்டுமென்றே பொய்யான விஷயத்தை பரப்புவது தவறான செயல். மேலும் விரைவில் சூர்யாவின் கங்குவா படம் திரையில் வெளியாக இருக்கிறது. ஆனால் கங்குவா படத்தின் கெட்டaபுக்காக சூர்யா ஒரே ஹேர் கட்டிங்கில் பல நாட்களாக இருந்து வருகிறார்.

அது தனக்கு பிடிக்கவில்லை, எப்போது அவர் ஹேர் கட் பண்ணுவார் என்று காத்துக் கொண்டிருப்பதாக ஜோதிகா கூறியிருந்தார். மேலும் ஜோதியாகவும் இப்போது சினிமாவில் படு பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் சூர்யாவுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ள நிலையில் மற்ற மொழி படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இப்போது கடுமையாக உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்துள்ள நிலையில் தீவிரமாக சினிமாவில் ஜோதிகா செயல்பட இருக்கிறார்.

Trending News