சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

56 வயதில் எஸ் ஜே சூர்யா சேர்த்த மொத்த சொத்து மதிப்பு.. சிலுக்கா.! மறக்க முடியாத 5 வசனங்கள்

S.J.Suryah: இயக்குனர் ஹீரோ என்பதை தாண்டி தற்போது தவிர்க்க முடியாத வில்லனாக உருவெடுத்துள்ளார் எஸ் ஜே சூர்யா. நடிப்பு அரக்கன் என்ற பட்டத்தையும் தனக்கே உரியதாக்கி கை நிறைய படங்களோடு வலம் வரும் இவர் இன்று தன்னுடைய 56வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 படங்களுக்கு பிறகு சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்திருந்தார். ஆனால் அதில் அவர் சில காட்சிகளில் மட்டுமே வந்த நிலையில் மூன்றாவது பாகத்தில் அவருக்கு பெரும் பங்கு இருக்கிறது.

அதேபோல் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன், கேம் சேஞ்சர் வீர தீர சூரன் உள்ளிட்ட பல படங்கள் இவர் கைவசம் இருக்கிறது. இப்படி பிசியாக இருக்கும் எஸ் ஜே சூர்யா தற்போது ஒரு படத்திற்கு 7 முதல் 10 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்.

மேலும் சென்னையில் இவருக்கு சொந்தமாக வீடு மற்றும் பிற சொத்துக்கள் இருக்கின்றன. அதேபோல் ஆடி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார்களும் இருக்கிறது. இதன் மதிப்பே சில கோடிகள் இருக்கும்.

எஸ் ஜே சூர்யாவின் பேமஸ் வசனங்கள்

அந்த வகையில் இவரிடம் தற்போது 150 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறாக 56 வயதில் இத்தனை கோடி சொத்துக்கள் வைத்திருக்கும் இந்த நடிப்பு அரக்கன் இன்னும் சிங்கிளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க இவர் பேசி ரசிகர்களை கவர்ந்த சில வசனங்களை பற்றி காண்போம். அதில் அன்பே ஆருயிரே படத்தில் இவர் டாக்டராக இருக்கும் ஊர்வசியிடம் இருக்கு ஆனா இல்ல என சொல்லும் வசனம் ரொம்பவும் பிரபலமானது.

அதேபோல் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் இவர் சொல்லும் சலிப்பா இருக்கு நண்பா என்ற வசனமும் இளைஞர்களின் பேவரைட். மேலும் மாநாடு படத்தில் வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு என பயங்கர டென்சனோடு சொல்லும் அந்த டயலாக் கலக்கலாக இருக்கும்.

அதேபோல் தலைவரே முடியல தலைவரே என நொந்து போகும் அந்த காட்சியும் ரசிக்க வைத்தது. இது எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த வருடம் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் அவர் சொல்லும் சிலுக்கா என்ற வசனம் சிறு பிள்ளைகள் வரை ரீச் ஆனது.

இப்படியாக படத்திற்கு படம் மாறுபட்ட உடல் மொழி வசன உச்சரிப்பு என அவர் வெரைட்டி காட்டி வருகிறார். அதுவே அவருடைய வெற்றியின் ரகசியம். அதேபோல் பந்தா இல்லாத இயல்பான பேச்சும் அந்த சிரிப்பும் அவருக்கான அடையாளமாக இருக்கிறது.

56 வயதிலும் சிங்கிளாக இருக்கும் எஸ் ஜே சூர்யா

Trending News