வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

நீதிக்காக கோர்ட் படியேறும் நாய்.. எஸ்.ஏ சந்திரசேகரனின் கூரன் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

Kooran Trailer: வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட பல படங்கள் தொடர்ச்சியாக வெளி வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது உருவாகி இருக்கும் படம் தான் கூரன்.

நிதின் வேமுபதி இயக்கத்தில் எஸ் ஏ சந்திரசேகர், பாலாஜி சக்திவேல், ஒய் ஜி மகேந்திரன் உட்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் தற்போது ரிலீசாகி உள்ளது. அதில் நாய் நீதி கேட்டு கோர்ட் படி ஏறுகிறது.

நீதிமன்றம் விசித்திரமாக பார்க்கும் ஒரு வழக்கு தான் இந்த படத்தின் கதை. அந்த நாய்க்கு ஆதரவாக வாதாட முன் வருகிறார் எஸ் ஏ சந்திரசேகர்.

கூரன் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

ஒரு கொலையாளியை நாய் எப்படி கண்டறிந்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துகிறது என்பதுதான் கதை என பார்க்கும் போதே தெரிகிறது.

கன்று குட்டிக்காக நீதி கேட்டு அரசனிடம் வந்த பசு கதையும் நினைவுக்கு வருகிறது. அப்படி ஒரு கோணத்தில் உருவாகி இருக்கிறது இந்த கூரன்.

ரொம்பவும் வித்தியாசமாகவும் சமூகப் பொறுப்புணர்வோடும் வெளிவந்திருக்கும் இந்த ட்ரெய்லர் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.

Trending News