Actor Vijay: பொதுவாக சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் தன்னுடைய வாரிசுகளை ஜெயிக்க வைப்பதற்காக அவர்களுக்கு முக்கிய வழிகாட்டியாக இருப்பார்கள். அப்படித்தான் ஆரம்பத்தில் விஜய்க்கு படிக்கட்டாக இவருடைய அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இருந்தார். அதன் மூலம் பல வெற்றி படங்களை பார்த்து மக்கள் ரசிக்கும் நாயகனாக வந்தார்.
இதனை தொடர்ந்து பல படங்கள் நடித்த நிலையில் சில படங்கள் நன்றாக ஓடியும் ஒரு சில படங்கள் தோல்வியும் அடைந்திருக்கிறது. இப்படியே போய்க் கொண்டிருக்கும் பொழுது விஜய் ஒரு கட்டத்தில் முன்னணி ஹீரோவாக வந்த நிலையில், இவருடைய அப்பா அடிக்கடி விஜய்யிடம் நீ தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக ஆகணும்.
Also read: சர்ச்சைகளால் கழட்டி விட்ட விஜய்.. ஹிட் பட இயக்குனர், இப்போ டம்மியாய் சுற்றும் பரிதாபம்
அதற்காக என்னென்ன வேலைகள் பண்ண வேண்டுமோ, அதில் உன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வரவேண்டும் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து இதையே கூறி வந்ததால் விஜய்க்கு ஒரு கட்டத்திற்கு மேல் வெறுப்பாகிவிட்டது. இதுதான் விஜய்க்கு மிகப்பெரிய மனக்கசப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
அத்துடன் இந்த படத்தில் நடித்தால் உனக்கு வெற்றி கிடைக்கும் என்று விஜய்க்கு பிடிக்காத கதையை ரொம்பவே டார்ச்சர் கொடுத்து சில படங்களில் நடிக்க வைத்திருக்கிறார். அப்படி இவருக்கு பிடிக்காமல் நடித்த படம் தான் சுக்கிரன் மற்றும் மதுர. அதுபோலவே இந்த ரெண்டு படங்களும் நல்லா ஓடாமல் விஜய்க்கு தோல்வி படமாக அமைந்தது.
Also read: ஒரே மெசேஜால் பதறிப் போன விஜய்.. அமெரிக்காவில் தளபதி எடுத்த சிகிச்சை
இதனால் ரொம்பவே கடுப்பான விஜய் ஒரு கட்டத்திற்கு மேல இந்த மாதிரி டார்ச்சர் அனுபவிக்க முடியாததால் மொத்தமாக அப்பாவிடம் இருந்து விலகி விட்டார். அத்துடன் இனி என்னுடைய கேரியரை நானே பார்த்துக்கொள்கிறேன். தயவு செய்து என்னுடைய விஷயத்தில் நீங்கள் இனி தலையிட வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.
இதனால் தான் அப்பா மகன்கள் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பித்தது. அதிலிருந்து எஸ்ஏசியும் சினிமா சம்பந்தமாக எந்த விஷயத்தையும் விஜய் இடம் கொண்டு போவதில்லை. தற்போது ரசிகர்களுக்கு எந்த மாதிரி படத்தை கொடுத்தால் பிடிக்கும் என்று விஜய்க்கு தெரிந்ததால் அவரே அனைத்து விஷயங்களையும் பார்த்துக் கொள்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி வெற்றிவாகை சூடிக்கொண்டு வருகிறார்.
Also read: சூப்பர் ஸ்டார் வெற்றிக்காக விஜய்யை ஃபாலோ செய்யும் தந்திரம்.. ஒரு இயக்குனரை உருவாக்க முடியலை