வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய்க்காக மௌனம் காக்கும் எஸ்ஏசி.. இல்லைன்னா லோகேஷுக்கும் நெல்சன் கதிதான்

Vijay-Lokesh: லியோ படம் சமீபத்தில் வெளியான நிலையில் விஜய் ரசிகர்களையே கவர தவறிவிட்டது. முதல் பாதி மாஸாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் பல குளறுபடியால் ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்திருந்தனர். இந்நிலையில் ஏற்கனவே இந்த படம் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்று லோகேஷ் சொல்லிவிட்டார். ஆனால் இப்போது லியோ படம் பல படங்களின் காப்பியாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

மேலும் காப்பியடிப்பதில் அட்லியை மிஞ்சி விடுவார் என்று ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க ஸ்கிரீன் பிளேவிலும் லோகேஷ் கோட்டை விட்டுவிட்டார். படத்தில் பல காட்சிகள் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருக்கிறது. உதாரணமாக மிஷிகினை சுடும் காட்சி அப்படியே ஜெகபதி பாபு படத்திலிருந்து எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் விஜய்யின் அப்பா எஸ்ஏசி ஒவ்வொரு விஜய்யின் படங்கள் வெளியாகும் போதும் பேட்டி கொடுப்பார். இந்த சூழலில் பீஸ்ட் படம் வெளியான போது குழந்தைகள் கூட நம்ப முடியாத அளவுக்கு காட்சிகள் நெல்சன் வைத்திருந்தார் என்று விமர்சனங்கள் இருந்தது.

அதேபோல் எஸ்ஏசியும் பீஸ்ட் படத்தின் திரைக்கதையை மோசமாக வறுத்தெடுத்திருந்தார். மேலும் படத்தில் லாஜிக் மிஸ்ஸை திரைக்கதை மூலம் நாங்கள் சரி செய்து விடுவோம். அப்படிதான் மாஸ் ஹீரோக்களை நாங்கள் வளர்த்து விட்டோம் என பெருமையாக பேசி இருந்தார்.

ஆனால் லியோ படத்தில் இப்போது லோகேஷ் திரைக்கதையையே கோட்டை விட்டுவிட்டார். ஆகையால் இனி எஸ்ஏசி பேட்டி கொடுத்தால் கண்டிப்பாக லோகேஷுக்கு டோஸ் விழும் என்று கூறப்படுகிறது. ஆனால் நடுவில் விஜய் மற்றும் அவரது அப்பா இடையே பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் தளபதிக்கு சப்போர்ட்டாக எஸ்ஏசி பேசி சர்ச்சை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் சமீபத்தில் தனது அப்பாவுடன் விஜய் இணைந்து விட்டார். அதற்கான புகைப்படமும் வெளியானது. இதனால் எஸ்ஏசி வாயை திறக்காமல் மௌனம் காத்து வருகிறார். இல்லையென்றால் நெல்சனை போல லோகேஷையும் கண்டிப்பாக வறுத்தெடுத்து இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News