புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ரஜினியை வைத்து விஜய்க்கு பதிலடி கொடுத்த எஸ்ஏசி.. வந்த வழி மறந்தோம்னா காணாம போயிடுவோம்

Super Star Title Contervesy: கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறிய விஷயம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதுதான். விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக விஜய்க்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

இதனால் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கு விஜய் மௌனம் சாதித்து வருவது தான் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அவர் வாயிலிருந்து எப்போதுமே ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என்று ஒத்தை வரியில் பதில் கொடுத்து விட்டால் மொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

Also Read : ரஜினியவே வந்து பாருன்னு மிரட்டும் விநாயகன்.. மொக்க, லொடுக்கு என கலக்கிய 5 படங்கள்

ஆனால் இப்போது விஜய்யின் தந்தை கொடுத்து பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினியை பற்றி அவர் கூறிய விஷயம் தான் அனைவரையும் புல்லரிக்கும் படியாக செய்திருக்கிறது. அதாவது எஸ்ஏசி நல்ல நிலைமைக்கு வந்த பிறகும் டி நகருக்கு சென்று ஆரம்பத்தில் சாப்பாட்டுக்கு வழி இன்றி பசியுடன் எப்படி படுத்திருந்தாரோ அதே இடத்தில் இரண்டு, மூன்று நேரம் படுத்து உறங்குவாராம்.

ஏனென்றால் நாம் வந்த வழியை மறந்து விடக்கூடாது என்பதற்காக வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை இதை செய்து வருவதாக எஸ்ஏசி கூறினார். அதுவும் இந்த பழக்கம் அவருக்கு ரஜினியிடம் இருந்து வந்ததாக கூறியிருக்கிறார். அதாவது ரஜினி எப்போதுமே படப்பிடிப்பு முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து கண்ணாடி முன் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை இறக்கி வைத்து விடுவாராம்.

Also Read : 2கே கிட்ஸ் பார்க்க வேண்டிய ரஜினியின் 15 வெற்றி படங்கள்.. தலைவன் நடிப்பை பார்த்து மெய்சிலிர்த்து போவீங்க

அதோடு மட்டுமல்லாமல் இரவு தினமும் எங்கிருந்து நமது பயணம் தொடங்கியது என்பதை நினைத்து பார்ப்பார். காலையில் பழைய கண்டக்டராக தான் படப்பிடிப்புக்கு ரஜினி வருவாராம். ஏனென்றால் வந்த வழி மறந்தோம் என்றால் சிறிது நாட்களிலேயே காணாமல் போய்விடுவோம். அதுமட்டுமின்றி தலைகணமும் ஏறிவிடும்.

மேலும் ரஜினி இதை தினமும் செய்து வருகிறார், ஆனால் நான் வருடத்திற்கு சில முறை மட்டுமே செய்து வருகிறேன் என விஜய்க்கு சரியான பதிலடியை எஸ்ஏசி கொடுத்திருக்கிறார். அதாவது ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற கர்வம் சுத்தமாக இல்லை என்பது இதன் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மேலும் விஜய்யின் அப்பா பேசிய இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.

Also Read : படு மொக்க, தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட விஜய்யின் 6 படங்கள்.. ரத்த கண்ணீர் வர வைத்த சுறா

Trending News