புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சாப்பாட்டுக்காக நடந்த சண்டை.. சாச்சனாவின் கண்ணீர், விஜய் சேதுபதியின் தீர்ப்பு என்ன.?

Biggboss 8: இன்றைய நாளுக்காக ரசிகர்கள் ஒருவாரமாக காத்திருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் இருந்த போது கூட வார இறுதிக்காக ஆடியன்ஸ் காத்திருப்பார்கள்.

ஆனால் இந்த முறை அந்த காத்திருப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் திறமை தான். கடந்த வாரமே அதை கண்டு ஆடியன்ஸ் மெர்சலாகி போயிருக்கின்றனர்.

அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கூட போட்டியாளர்களை அன்பா விசாரிப்போமா என விஜய் சேதுபதி கேட்டதே சம்பவம் இருக்கு என உணர்த்தியது. அதன்படி தற்போது ஒரு பஞ்சாயத்துடன் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதியின் தீர்ப்பு என்ன.?

இதில் சாப்பாட்டுக்காக நடந்த சண்டை பற்றி விஜய் சேதுபதி கேள்வி எழுப்புகிறார். அதன்படி அன்சிதாவிடம் சாச்சனா உணவை இரண்டு முறை கேட்டும் அவர் கொடுக்கவில்லை என்பதுதான் புகார். அது பற்றிய விசாரணையை ஆரம்பிக்கிறார் மக்கள் செல்வன்.

இந்த விவகாரம் ஒரு மணி நேர எபிசோடில் காட்டப்படவில்லை. அதனால் ரசிகர்களின் ஆர்வம் இன்னும் அதிகமாக இருக்கிறது. இதில் சாச்சனா சாப்பாட்டுக்காக எத்தனை முறை கேட்கிறது என கண்ணீருடன் சொல்கிறார்.

இதில் அன்சிதா மீது தவறா இல்லை சாச்சனா தவறாக புரிந்து கொண்டு உள்ளாரா என்பது தெரியவில்லை. ஆனால் விஜய் சேதுபதி நிச்சயம் இதை சரியான கோணத்தில் சென்று முடித்து வைப்பார் என்பது மட்டும் தெரிகிறது.

Trending News