திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மாப்பிள்ளை வரனுக்கு சாய் பல்லவி போட்ட கண்டிஷன்.. அடுத்த ஔவையார் லிஸ்டில் வரப்போகும் மலர் டீச்சர்

Sai Pallavi’s Expectation for Bridegroom: சாய் பல்லவி வாழ்க்கையை திருப்பி போட்ட கதாபாத்திரம் மலர் டீச்சர். பிரேமம் படத்தில் காலேஜ் டீச்சராக வரும் மலர் கதாபாத்திரம் தான் இவரை சினிமாவில் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டது என்று கூறலாம். ஒட்டுமொத்த இளசுகளையும் கவர்ந்து இழுத்தது அந்த கதாபாத்திரம்.

இன்று வரை சினிமாவில் கிளாமர் காட்டாமல் தனக்கான ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். கதைக்கு முக்கியத்துவம் மற்றும் ஹீரோயின் சப்ஜெக்ட்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருக்கு 32 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு அடித்து வருகிறார். இப்பொழுது சாய் பல்லவியின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை வரன் பார்த்து வருகிறார்கள். யாரையும் காதலிக்கவில்லை என்பதை வீட்டில் சொல்லி மாப்பிள்ளை பார்க்கும்படி கூறிவிட்டாராம். கூடிய விரைவில் டும் டும் டும் சாப்பாடு போட்டு விடுவார்.

Also Read: அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்ன தயாரிப்பாளர்.. பட வாய்ப்பை உதறித் தள்ளிய சாய்பல்லவி!

சாய்பல்லவி தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பையும் கூறி இருக்கிறார். அவருக்கு கருமையாக இருக்கும் பசங்களை ரொம்ப பிடிக்குமாம். எள் என்றால் எண்ணெய் போல் இருக்கும் குணாதிசயம் இருந்தால் உடனே ஓகே தானம்.

மிகவும் கேரிங்கான ஆளாக இருக்க வேண்டுமாம். மேலும் சாய்பல்லவிக்கு சமைக்க தெரியாதாம். சமைப்பவர்களாக இருந்தால் அதிகம் முன்னுரிமை கொடுப்பாராம். ஆம்பளை என்றால் கர்வம், அழக்கூடாது என்றெல்லாம் குணாதிசயங்கள் இருக்கக்கூடாது.

எமோஷன் ஆனால் எல்லோரும் அழுவார்கள் அந்த மாதிரி அழக்கூடிய ஆம்பளையாக இருக்க வேண்டுமாம். இப்படி ஒரு மாப்பிள்ளை இருந்தால் உடனே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் சாய்பல்லவி. இந்த மாதிரி எல்லா குணமும் இருக்கும் பையன் ஒரே ஆளாக கிடைப்பது எளிதல்ல. எனவே அடுத்த அவ்வையார் லிஸ்டில் உங்களுக்குத்தான் இடம் என கலாய்த்து வருகின்றனர்.

Also Read: அவர் இஷ்டத்திற்கு வர முடியாது.. கோபத்தில் சாய்பல்லவி இடத்துக்கு வந்த திரிஷாவும் எஸ்கேப்

Trending News