பேரழகி-க்கே இந்த நிலையா.. நான் ஒன்னும் சதை பிண்டமல்ல.. உண்மையை உடைத்த சாய் பல்லவி

sai pallavi
sai pallavi

சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவி தீபாவளிக்கு வெளியாகும் அந்த படத்திற்கான புரமோஷனை ஆரம்பித்து விட்டார். பொதுவாக நடிகைகள் என்றாலே, டப்பா டப்பாவாக மேக் அப் போடுவார்கள் என்ற மனப்பான்மை உள்ளது.

ஆனால் எந்த மேக் அப்பும் போடாமாலையே பேரழகியாக திகழ்பவர் சாய் பல்லவி. இவருக்கென்று ரசிகர் பட்டாளமே உள்ளது. முக்கியமாக எந்த ஆடம்பரமோ, ஆர்பாட்டமோ, கவர்ச்சியா காட்டாமல், சிம்பிளாக நிகழ்ச்சிகளுக்கு புடவை கட்டிக்கொண்டு வந்து செல்வார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சாய் பல்லவி சொன்ன சில விஷயங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறியதாவது, “என்னுடைய முதல் படம் பண்ணிட்டு ஜார்ஜியா போனதுக்குப்பின், என்னுடைய போட்டோவை நிறைய பேர் டிஸ்பிளே பிக்சராக வைச்சிருந்தது புதுசாக இருந்தது. நாம என்ன அழகவா இருக்கோம். நம்மளை டிஸ்பிளை பிக்சர் வைச்சிருக்காங்களேன்னு நினைச்சேன்.”

“ஏன் என்றால், நான் அழகாக இருக்கிறேன் என்று என் அம்மாவை தவிர யாரும் சொன்னதே இல்லை. அம்மா சொல்வதை எப்படி பெரிதாக எடுக்க முடியும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அப்படின்னு நினைச்சு, அவங்களை எப்போதுமே கிண்டல் செய்வேன். வேற பசங்க லா யாருமே சொன்னது இல்லை. அது மட்டும் இல்லாம, பெரியவங்க எல்லாம் என்னோட முகப்பருவை பார்த்துட்டு, ஏன் இப்படி குதறி இருக்கு ன்னு சொல்லிட்டு போயிருவாங்க.. “

நான் ஒன்னும் சதை பிண்டமல்ல..

“அதுனால், ப்ரேமம் படத்துக்கு அப்றம் என்ன அழகா இருக்க ன்னு எல்லாரும் சொல்லும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக தான் இருந்தது. மேலும் சினிமாவுக்கு வந்த பிறகு, என்னை கவர்ச்சியாக நடிக்கலாமே என்று சொன்னார்கள். ஆனால், பிரேமம் படம் வெளியான சமயத்தில் பலரும் அந்த வீடியோவை வைரலாக்கி மோசமான கமெண்ட்டுகளை போட ஆரம்பித்து விட்டனர். அப்போதுதான் முடிவு செய்தேன் இனிமேல் இப்படி செய்யக் கூடாது என்று நான் முடிவு செய்தேன்..”

” நான் ஒன்னும் சதை பிண்டமல்ல.. பிரேமம் படம் வெளியான சமயத்தில் பலரும் அந்த வீடியோவை வைரலாக்கி மோசமான கமெண்ட்டுகளை போட ஆரம்பித்து விட்டனர். அப்போதுதான் முடிவு செய்தேன் இனிமேல் இப்படி செய்யக் கூடாது என சாய் பல்லவி கூறியுள்ளார்.”

“இதனால் சில பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு தவறியது. அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு தேவையும் இல்லை. நடிப்பு திறமையை நம்பி வருபவர்கள் மட்டும் போதும் ” என்று கூறியுள்ளார். இவருடைய இந்த குணத்திற்காகவே இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

Advertisement Amazon Prime Banner