தமிழிலும், மலையாளத்திலும் தன் நடிப்பினால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் சாய் பல்லவி. மேலும் சினிமா துறையில் மேக்கப் போடாத ஒரே நடிகை என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
தன் எளிமையான தோற்றத்தாலும் மற்றும் எதார்த்தமான நடிப்பாலும் அடுத்தடுத்து பல படவாய்ப்புகளை பெற்று வருகிறார். மேலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் இறங்கி நடிக்கும் ஆற்றல் கொண்டவர். இவர் நடித்த படத்தில் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த 4 கதாபாத்திரத்தை பற்றி இங்கு பார்க்கலாம்.
Also Read: மாமனார் மாதிரி மேடையில் பேசினால் மட்டும் போதுமா.? அட்டூழியம், தயாரிப்பாளரை அழ வைக்கும் தனுஷ்
பிரேமம்: 2015 ல் வெளியான மலையாள படம் தான் பிரேமம். இப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் மலர் டீச்சராக இடம் பெற்றிருப்பார் சாய் பல்லவி. மேலும் இப்படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பால் இவருக்கு மேலும் மேலும் பல பட வாய்ப்புகள் பெற்று தந்தது. இப்படம் 300 நாட்கள் தமிழ்நாட்டில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை பெற்று தந்தது.
மாரி 2: 2018ல் பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தில் சாய் பல்லவி, தனுஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இதன் பாகம் ஒன்று 2015ல் வெளிவந்து பெரிய ஹிட் கொடுத்த நிலையில் இப்படமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை முன் வைத்தது. மாரி 2ல் இவர் தனுஷை விரும்பும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இருவரும் இணைந்து வரும் ரவுடி பேபி என்ற பாடலை விரும்பாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இவரின் நடனம் தனுஷுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும். ஆகையால் இப்படமும் இவருக்கு பேர் சொல்லும் படமாக அமைந்தது.
Also Read: தந்திரமாக காய் நகர்த்தும் தனுஷ்.. சிவகார்த்திகேயனை காலி பண்ண போடும் திட்டம்
என் ஜி கே: 2019ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் என் ஜி கே. இதில் சூர்யா, சாய் பல்லவி, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். இப்படம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக அமைந்திருக்கும். மேலும் சூர்யாவின் மனைவியாக குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் சாய் பல்லவி அசதிருப்பார். மேலும் இவரின் நடிப்பு மற்ற ஹீரோயின்களுக்கு பொறாமை ஏற்படும் அளவிற்கு அமைந்திருக்கும்.
கார்கி: 2022ல் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் கார்கி. இப்படத்தில் சாய் பல்லவி, காளி வெங்கட், ஆர் எஸ் சிவாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் எதார்த்தமான பள்ளி ஆசிரியராக சாய் பல்லவி நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து பெண் குழந்தை சம்பந்தமான பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் தன் தந்தையை காப்பாற்றும் படலத்தில் அசத்திருப்பார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
Also Read: நாளுக்கு நாள் குறையும் ஆடை.. உள்ளாடை தெரிய மோசமாக போஸ் கொடுத்த சாய் பல்லவி