GV Prakash: உண்மை வாசல்ல இருந்து கிளம்புறதுக்குள்ள பொய் ஊரையே சுத்திட்டு வந்துடும்னு சொல்லுவாங்க. அப்படித்தான் ஆகிவிட்டது ஜிவி பிரகாஷ் குமார் வீட்டுக் கதை. கடந்த இரண்டு தினங்களாகவே ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினர் விவாகரத்தை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
முதலில் வழக்கம் போல இது ஒரு வதந்தி தான் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கடந்து விட்டார்கள். ஆனால் நேற்று ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் சேர்ந்து தாங்கள் பரஸ்பரமாக பிரிய இருப்பதாக ரசிகர்களுக்கு அறிவித்துவிட்டார்கள்.
ஒரு பக்கம் நல்ல ஜோடி பிரிந்து விட்டார்களே என்ற வருத்தம் எல்லாருக்கும் இருக்க தான் செய்கிறது. ஆனால் இன்னொரு பக்கம் எதனால் இந்த விவாகரத்து என்று அறிவு மேதாவிகள் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
கடைசியில் இந்த பிரச்சனையின் முடிவு ஜி வி பிரகாஷ் நடிகர் ஆனதும், பல நடிகைகளுடன் நெருக்கமாக நடித்தது தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என்று ஆகிவிட்டது. 12 வருடம் காதலித்தவர்கள், 11 வருடம் திருமண வாழ்க்கையில் இருந்தவர்கள் இப்படி ஒரு முடிவு இது போன்ற காரணத்திற்காக எடுப்பார்களா என்று கேட்டால் சந்தேகம்தான்.
ஜி வி பிரகாஷ் விட அதிகமாக நடிகைகளுடன் நெருக்கமாக நடித்த எத்தனையோ நடிகர்கள் இன்று குடும்பம் குழந்தை குட்டி என்ற தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சனை என என்று நம்மளுக்கு தோன்றலாம்.
பகீர் கிளப்பிய பிரபலம்
இதற்கான பதிலை பத்திரிகையாளர் சவிதா ஜோசப் சொல்லி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருக்கும் இடையே விவாகரத்து நடப்பதற்கு, சைந்தவி தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட ஒரு சில அழுத்தங்களும் காரணம் என சொல்லப்படுகிறது.
சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரின் குடும்பங்கள் வித்தியாசமான மத எண்ணங்களையும், சமூக எண்ணங்களையும் கொண்டது. ஜிவி பிரகாஷ் ரொம்பவே முற்போக்குத்தனமான எண்ணத்தைக் கொண்டவர். சைந்தவியின் அம்மா சனாதனத்தை தூக்கிப் பிடிக்கக் கூடிய ஆள்.
அவர் கொடுத்த அழுத்தத்தால் தான் ஜிவி பிரகாஷ் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்திருந்த போது நேரில் சந்தித்ததாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் அவர் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் அதிகமாக சைந்தவி தன் அம்மா வீட்டிற்காக செலவு செய்திருக்கிறார்.
இதுதான் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. இருவருக்குமே கடந்த இரண்டு வருடங்களாக பெரிய அளவில் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்த நிலையில் தான் இந்த பிரச்சனை விவாகரத்தை எட்டி இருக்கிறது.