Saindhavi: நட்சத்திர தம்பதிகளின் பிரிவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்து தான். இதற்கு காரணம் இவர்களுடைய அழகான காதல் கதை தான்.
பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து தங்களுக்கான துறையில் தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவ்வளவு புரிதல் இருந்தும் இவர்களுக்குள் எதனால் விவாகரத்து நடைபெற்றது என்பது பெரிய சந்தேகமாகவே இருந்தது.
அட, இத யாரும் நோட் பண்ணலையே!
உண்மையில் சைந்தவி விவாகரத்திற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்பே ஒரு பேட்டியில் இது பற்றி ஹின்ட் கொடுத்திருக்கிறார்.
சைந்தவி உடன் ஆன திருமணத்திற்கு பிறகு தான் ஜிவி பிரகாஷ் நடிப்பில் இறங்கியது. நடிக்கப் போகிறேன் என்று சொன்னதும் சைந்தவி ஜிவி பிரகாஷுக்கு நிறைய கண்டிஷன் போட்டு இருக்கிறார்.
அதை எதுவுமே அவர் பின்பற்றவில்லை என சைந்தவி சொல்லி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் தியேட்டரில் ஒரு சில படங்களில் ஜிவி பிரகாஷின் நடிப்பை பார்க்கும் பொழுது சைந்தவிக்கு ரொம்பவும் அதிர்ச்சியாக இருந்ததாம்.
இருந்தாலும் இது சினிமா என்பதால் ஓரளவுக்கு சமாதானப்படுத்திக் கொண்டாராம்.
ஜிவி பிரகாஷ் பொருத்தவரைக்கும் அவருடைய படங்கள் பெரும்பாலும் அடல்ட் கன்டென்ட் அதிகம் கொண்டவையாக இருக்கும்.
அதிலும் இவர்களது விவாகரத்துக்கு முன்னால் ரிலீஸ் ஆன பேச்சுலர் படம் பற்றி சொல்லவே வேண்டாம்.
இதிலிருந்து ஜிவி பிரகாஷ் நடிப்பதை தேர்ந்தெடுத்த பிறகு தான் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.