வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

5 கோடி கொடுத்தாலும் வேண்டாமென்ற சாய்பல்லவி.. நான் அனுபவித்ததை மற்றவர்கள் அனுபவிக்க வேண்டாம்

சாய்பல்லவி, இவரை மலர் டீச்சர் என்று சொன்னால்தான் தமிழக மக்களுக்கு தெரியும். அந்த அளவிற்கு பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கேரக்டர் ரோலில் பின்னி எடுத்தவர் சாய் பல்லவி.

அம்மணி பிறந்து வளர்ந்தது எல்லாம் நம்ம நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி தான். ஆனால் இங்கிருந்து அக்கட தேசம் சென்று தெலுங்கு படங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அங்கே முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அவரை நாடிய அழகு சாதன நிறுவனம் ஒன்று நீங்கள், எங்கள் விளம்பரத்தில் நடித்து கொடுத்தால் 2 கோடி தருகிறோம் என்று கூறியுள்ளனர். எல்லாவற்றையும் கேட்ட சாய்பல்லவி இதில் எனக்கு விருப்பமில்லை என்று மறுத்துவிட்டாராம். 3 கோடி வரை பேரம் பேசிய அவர்களிடம், நீங்கள் 5 கோடி கொடுத்தாலும் எனக்கு வேண்டாம் சார் என்று தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

அவர் மறுத்ததற்கான காரணத்தையும் கூறியுள்ளார். எனது தங்கை கொஞ்சம் மாநிறமாக தான் இருப்பார். அவரிடம் நான், நீ காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட்டால் உனக்கு மினுமினுப்பான தோற்றம் கிடைக்கும் என்று கூறினேன். அதைக்கேட்ட அவர் அவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வருகிறார்.

பொதுவாக நாம் யாரிடமாவது நீ அழகாக இல்லை என்று கூறினால் அதற்காக, அவர்கள் எந்த விலை வேண்டுமென்றாலும் கொடுப்பார்கள். அது உண்மையாக இருந்தாலும் சரி, பொய்யாக இருந்தாலும் சரி. ஆகையால் மக்களிடம் நான் இத்தகைய விளம்பரங்கள் மூலம் அதனை கொண்டு செல்ல விரும்பவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சாய்பல்லவி.

Trending News