வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மும்பையில் AR ரகுமான் மனைவி , அவசரமாக வெளியான அறிக்கை.. மாத்தி மாத்தி பேசுறாங்களே, என்னவா இருக்கும்?

AR Rahman: சில தினங்களுக்கு முன் தன்னுடைய கணவரை பிரிவதாக ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதை தொடர்ந்து இந்த விவாகரத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் என மீடியாக்களில் பலவிதமாக பேசப்பட்டது.

அதே நேரத்தில் அப்பாவை பற்றி எதுவும் தவறாக பேசாதீர்கள் என ஏஆர் ரகுமானின் மகன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து இன்று அவசர அவசரமாக ஏ ஆர் ரகுமானின் மனைவி பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

அந்த பதிவில் தனக்கு இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லை என்றும், சிகிச்சை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். மேலும் தன்னுடைய சிகிச்சை எந்த விதத்திலும் தன்னுடைய கணவரை பாதிக்க கூடாது என்பதற்காகத்தான் இந்த விவாகரத்து முடிவு என்றும் சொல்லி இருக்கிறார்.

இந்த உறவிலிருந்து எனக்கு கொஞ்சம் பிரேக் தேவைப்பட்டது, நாங்கள் இதுவரை எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் யாரும் ஏ ஆர் ரஹ்மானை பற்றி அவதூறு பரப்பாதீர்கள், அவர் இந்த உலகத்திலேயே சிறந்த மனிதர் என்றும் சொல்லியிருக்கிறார்.

மும்பையில் சிகிச்சைக்காக இருப்பதால் விரைவில் சென்னை திரும்ப இருப்பதாகவும் பேசி இருக்கிறார். இருவருக்குள்ளும் எந்த பிரச்சனையும் இல்லை, தன்னுடைய சிகிச்சை கணவரை பாதிக்க கூடாது என்பதால் விவாகரத்து என சாய்ரா சொல்லியிருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சியை தான் கொடுத்திருக்கிறது.

கணவரை எந்த விதத்திலும் எந்த விஷயமும் பாதிக்க கூடாது என்று நினைத்தவர் எதற்காக விவாகரத்து செய்ய போவதை அதிகாரப்பூர்வமாக வெளியில் அறிவிக்க வேண்டும். இதனால் தானே தற்போது ஏ ஆர் ரகுமானை எல்லோரும் தவறாக பேசுகிறார்கள். உண்மையிலேயே இவர்களுக்குள் என்ன நடக்கிறது, இதன் பின்னணியில் வேறு யாராவது இருப்பார்களா என்று கூட பேச்சுக்கள் எழுந்து வருகிறது.

Trending News