Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரி மருமகளை அண்டி பிழைக்கிறோம் என்பதை மறந்துவிட்டு ஓவராக ஆட்டம் ஆடுகிறார். அதிலும் வாய்க்கு வந்தபடி என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவிற்கு எழில் மற்றும் அமிர்தாவை கண்ணா பின்னான்னு திட்டுகிறார். இதற்கு இந்த ஈஸ்வரி பேசாமல் ஜெயிலே இருந்திருக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு அராஜகம் பண்ணி வருகிறார்.
அப்படிப்பட்ட இந்த ஈஸ்வரிக்கு, ராதிகா மற்றும் இவருடைய அம்மா கமலா தான் சரியான ஆளு என்று சொல்வதற்கு ஏற்ப ஈஸ்வரியின் அராஜகம் ஓவராக போய்க் கொண்டிருக்கிறது. ஈஸ்வரி கொட்டத்தை அடக்க முடியாத பாக்கியா, எழிலை காயப்படுத்தும் விதமாக வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்லிவிட்டார். ஈஸ்வரிடமிருந்து எழில் மற்றும் அமிர்தா தப்பித்து போய் தனியாக வாழ்ந்தால் தான் நிம்மதியாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் பாக்கியா கூறியிருக்கிறார்.
மகனை விட்டுக் கொடுக்க முடியாமல் தேடிப் போகும் கோபி
ஆனாலும் ஈஸ்வரி பேசியது தவறு என்று பாக்யாவால் சொல்ல முடியாமல் வாயடைத்து போய் நிற்கிறார். கடைசியில் எழிலும், இனிமேலும் இங்கே இருக்க வேண்டாம் என்று அமிர்தா மற்றும் நிலாவை கூட்டிட்டு வெளியேறுகிறார். யார் தடுத்தாலும் கேட்காத எழில் எங்கே போவது என்று தெரியாமல் ஒரு ஹோட்டலில் தங்குகிறார்.
வழக்கம் போல் எல்லாத்தையும் தவறாக புரிந்து கொண்டு சொதப்பும் இனியா இதையும் பத்த வச்சு விட்டார். அந்த வகையில் கோபிக்கு போன் பண்ணி, எழில் அண்ணா வீட்டை விட்டு போய்விட்டார். அம்மா தான் அவர்களை வெளியே அனுப்பினார்கள் என்று அரைகுறையாக சொல்லி கொளுத்தி போடும் வேலையை பார்த்து விட்டார். இதை கேட்டதும் கோபி, என்ன இந்த பாக்கியா ரொம்ப தான் ஓவராக பண்ணிக் கொண்டிருக்கிறார்.
கேட்க யாரும் இல்லாததால் இஷ்டத்துக்கு பண்ணுகிறாரா என்று திட்டிவிட்டு எழிலுக்கு கோபி போன் பண்ணி பார்க்கிறார். எழில் போன் எடுக்காததால் அமிர்தாவுக்கு போன் பண்ணுகிறார். அப்பொழுது கோபி ஆறுதலாக பேசிவிட்டு நீங்க எங்க இருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு எழில் இருக்கும் இடத்தை சொல்ல வேண்டாம் என்று சைகை மூலமாக சொல்லுகிறார்.
ஆனாலும் கோபி எப்படியோ அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டு ஹோட்டலுக்கு வந்து விடுகிறார். வந்ததும் அவர்களுக்கு ஆறுதலாக பேசி நிலாவுடன் பாசத்தை காட்டுகிறார். இதுதான் சான்ஸ் என்று கிடைக்கிற கேப்ல ஸ்கோர் பண்ணனும் என்று கோபி, ராதிகாவுடன் இருக்கும் வீட்டிற்கு எழில் அமிர்தாவை கூப்பிடுகிறார்.
சும்மாவே எழிலுக்கு கோபியை பிடிக்காது, இதுல அவமானப்பட்டு வந்து நிற்கும் பொழுது கூப்பிட்டா போயிடக்கூடிய ஆளா எழில். அந்த வகையில் நிச்சயம் கோபி கூட போக மாட்டார். இருந்தாலும் தற்போது இருக்கும் இடம் வேண்டும் என்பதால் வாடகை வீட்டில் தங்கி இருந்து அவருடைய கனவு லட்சியத்தை ஜெயித்து காட்டும் விதமாக எழில் போராட போகிறார்.
ஆனால் பாக்யா, ஒரு பக்கம் எழிலை வெளியே போக சொல்லிட்டு இன்னொரு பக்கம் அழுகிறார். ஆக மொத்தத்தில் நல்லா இருந்த குடும்பத்தில் கும்மி அடிக்கும் விதமாக ஈஸ்வரி தரமான சம்பவத்தை செய்து விட்டார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- ஈஸ்வரி இடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் பாக்யா மருமகள்
- பாக்கியாவிற்கு அடுத்து அமிர்தாவை டார்ச்சர் பண்ணும் ஈஸ்வரி
- ஈஸ்வரியுடன் சேர்ந்து கோபியை அவமானப்படுத்திய பாக்யா