திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஐட்டம் டான்ஸ் ஆடி பண மழையில் குளித்த 5 நடிகைகள்.. ஹீரோயினை விட அதிகம் லாவிட்டு போன ரம்யா கிருஷ்ணன்

Salary Details Of Actresses In Item Song :பொதுவாக சினிமாவில் ஒரு ஐட்டம் பாடலில் நடனமாட நடிகைகள் தயங்குவார்கள். ஏனென்றால் அதன் பிறகு அவர்களுக்கு பட வாய்ப்பு வருவது மிகவும் கடினம். ஆனாலும் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் ஐட்டம் டான்ஸில் ஆடி பண மழையில் குளித்த ஐந்து நடிகைகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனா : நடிகையாக வனம் வந்து கொண்டிருந்த மீனா விஜய்யின் ஷாஜகான் படத்தில் ஐட்டம் பாடல் ஒன்று ஆடியிருப்பார். அதாவது சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்ற பாடலில் அருமையாக ஆடி இருந்தார். இந்த பாடலுக்கு அவருக்கு 80 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also Read : வயது வித்தியாசம் பார்க்காமல் மீனா ஜோடி போட்ட 6 பிரபலங்கள்.. 28 வயசு கேப் எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்

சிம்ரன் : டாப் நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்தவர் தான் சிம்ரன். இவர் விஜய் உடன் பட படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். ஆனாலும் யூத் படத்தில் சிம்ரன் ஆல்தோட்ட பூபதி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார். இதற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி சம்பளம் பெற்றாராம்.

ரீமா சென் : மிகவும் திறமையான நடிகையான ரீமாசென் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து இருக்கிறார். அதிலும் ஜேஜே படத்தில் மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலுக்கு கிட்டத்தட்ட 50 லட்சம் சம்பளமாக ரீமாசென் பெற்றிருந்தார்.

Also Read : பணத்திற்காக ஐட்டம் டான்சராக மாற்றப்பட்ட 5 நடிகைகள்.. இடுப்பழகை காட்டி மயக்கிய சிம்ரன்

ரம்யா கிருஷ்ணன் : படையப்பாவில் நீலாம்பரி, பாகுபலி சிவகாமி தேவி என யாரும் இப்படி நடிக்க முடியாது என பல அற்புதமான கதாபாத்திரங்களை கொடுத்தவர்தான் ரம்யா கிருஷ்ணன். வசீகரமான தோற்றமுடைய இவர் காக்கா காக்கா படத்தில் தூது வருமா என்ற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடினார். இந்த படத்தில் நடித்த ஹீரோயினை விட அதிகமாக அதாவது ஒரு கோடி சம்பளம் பெற்று இருந்தார்.

சமந்தா : புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா ஓஹோ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா ஐட்டம் நடனம் ஆடி இருந்தார். இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி இருந்தது. ஒரு பாடலுக்கு மட்டும் கிட்டதட்ட 3 கோடி சம்பளம் ஆக சமந்தா பெற்றிருந்தார். மேலும் அவர் ஆட்டத்திற்கு இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்திருக்கலாம்.

Also Read : நடிகைகளையே தாக்கும் விசித்திர நோய்.. சமந்தாவுக்கு வந்ததைப் போல் விஜய் பட ஹீரோயினுக்கு வந்த பேராபத்து

Trending News