திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாமன்னன் படத்தில் நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம்.. உதயநிதியை ஓவர்டேக் செய்த மாரி செல்வராஜ்

Maamanan Actor Actress Salary Detail: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது மாமன்னன் படம். வடிவேலுவின் நடிப்புக்காகவும், உதயநிதி கடைசி படம் என்பதால் மாமன்னன் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்த படத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. மாமன்னன் படம் கிட்டதட்ட 40 கோடியில் இருந்து 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் மாமன்னன் படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைத்த ஏஆர் ரகுமானுக்கு 2 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read : மாமன்னன் படத்தை பார்த்த வெற்றிமாறன்.. ஒத்த வரியில் கொடுத்த விமர்சனம்

மேலும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணிபுரியும் ரவீணா ரவி இந்த படத்தில் பகத் பாசிலின் மனைவியாக சில காட்சிகளில் நடித்திருந்தார். அவருக்கு 20 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக லால் 25 லட்சம் சம்பளம் பெற்றிருக்கிறார். மேலும் யோகி பாபுவுக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக மாமன்னன் கதாநாயகி கீர்த்தி சுரேஷ்க்கு 2 கோடி சம்பளம் உதயநிதி கொடுத்திருக்கிறார். அடுத்ததாக மாமன்னன் படத்தின் கதாநாயகனாக ஜொலித்த வடிவேலுக்கு கிட்டத்தட்ட 3 கோடியில் இருந்து 4 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் உதயநிதி 4 கோடியிலிருந்து 5 கோடி வரை சம்பளம் பெற்று இருக்கிறார்.

Also Read : வாய்க்கிழிய பேசின பேச்சுக்கும் படத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.. மண்ணை கவ்விய மாமன்னன்

மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசிலுக்கு இரண்டு கோடியில் இருந்து மூன்று கோடி வரை கொடுக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜுக்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கதாநாயகன் உதயநிதியையே மாரி செல்வராஜ் ஓரம் கட்டி இருக்கிறார்.

அதுமட்டும்இன்றி போட்ட பட்ஜெட்டை கிட்டத்தட்ட ஒரு வாரத்திலேயே மாமன்னன் படம் எடுத்து விடும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது. அந்த வகையில் உதயநிதி, தான் நடிப்பில் உருவான கடைசி படமான மாமன்னன் படத்தின் மூலம் தனது கல்லாப் பெட்டியை நிரப்ப இருக்கிறார்.

Also Read : குரங்கு கையில பூமாலை கிடைச்ச கதைதான்.. எதையும் சரியாகப் பயன்படுத்தாத மாரி செல்வராஜ்

Trending News