திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

CWC 5: குக் வித் கோமாளி 5 போட்டியாளர்களின் சம்பள லிஸ்ட்.. பிரியங்காவை விட புகழுக்கு அதிகமாக வாரி இறைக்கும் விஜய் டிவி

Salary list of Cook with comali season 5: விஜய் டிவி பொருத்தவரை டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க வேண்டும் என்றால் என்ன யுத்தியை பயன்படுத்தினால் அதிகரிக்கும் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது. அதன்படி ஒரு பக்கம் சீரியல்கள் மூலம் மக்களை கொஞ்சம் கொஞ்சம் ஈர்த்துக் கொண்டு வருகிறது. அதே மாதிரி ரியாலிட்டி ஷோ மூலம் மக்களை வேறு எங்கேயும் திசை திருப்பாமல் பார்த்து கொள்கிறது.

அந்த வகையில் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஈடாக வேறு எதுவும் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை, சச்சரவு என்று காட்டி மக்களுக்கு பொழுதுபோக்காக இருந்து வருகிறது. அதே மாதிரி மொத்த மன அழுத்தத்தையும் குறைக்கும் விதமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் டிஆர்பி ரேட்டிங்கை கூட்டுகிறார்கள்.

அந்த வகையில் வெற்றிகரமாக தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்களாக ஆகிவிட்டது. இதில் செஃப் வெங்கட் பட் இல்லை என்ற குறை தெரியாமல் இருப்பதற்காக பல சூட்சுமங்களை விஜய் டிவி செய்து வருகிறது. ஆனாலும் ஆரம்பித்த வாரம் மொத்தமாக சொதப்பிவிட்டது என்று சொல்வதற்கு ஏற்ப பார்வையாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துவிட்டது.

சீனியர் போஸ்ட்க்கு அதிக சம்பளத்தை கொடுத்த விஜய் டிவி

ஆனால் கடந்த வாரம் அப்படி இருக்கக் கூடாது என்று கோமாளி மற்றும் குக் வைத்து என்டர்டைன்மென்ட் பண்ண முயற்சி எடுத்து இருக்கிறார்கள். இப்படி நடுநிலையாக போய்க் கொண்டிருக்கும் இந்த சீசனில் பங்கேற்று இருக்கும் போட்டியாளர்களின் சம்பள லிஸ்ட் தற்போது வெளியாயிருக்கிறது. அதை பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் TTF வாசனின் காதலியாக உள்ளே நுழைந்த ஷாலின் சோயா ஒரு எபிசோடுக்கு 10000 ரூபாய் வாங்குகிறார். மேலும் ஜீ தமிழில் இந்திரா சீரியலில் நடிக்கும் அக்ஷய கமல், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் கேரக்டரில் நடிக்கும் வசந்த் வசி மற்றும் பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இவர்களுக்கும் ஒரு எபிசோடுக்கு 10000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இவர்களை தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக இருந்து சமீபத்தில் கதாநாயகியாக நுழைந்த திவ்யா துரைசாமி ஒரு எபிசோடுக்கு 12000 சம்பளம் பெறுகிறார். அத்துடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பூஜா வெங்கட் ஒரு எபிசோடுக்கு 9000 வாங்குகிறார். இந்த சீசனில் மிக குறைவாக சம்பளம் வாங்கக்கூடிய போட்டியாளர் இவராகத்தான் இருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து யூடியூபர் இர்ஃபான் மற்றும் காமெடி நடிகர் விடிவி கணேஷ் இவர்களுக்கு ஒரு எபிசோடு 15000 சம்பளம் கொடுக்கிறார்கள். அதேபோல் விஜய் டிவியில் எங்கு பார்த்தாலும் நான் தான் தெரிய வேண்டும் என்று தொகுப்பாளிணியாக கலக்கிக் கொண்டு வரும் பிரியங்கா மற்றும் விஜய் டிவி சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூத்த மருமகளாக நடித்த சுஜிதா இவர்களுக்கு அதிகபட்ச சம்பளமாக 18000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் இவர்களை எல்லாம் விட நாங்கள் தான் இந்த நிகழ்ச்சிக்கு சீனியர் என்று காலரை தூக்கிவிட்டு இரண்டு கோமாளிகள் அதிகமான சம்பளத்தை பெறுகிறார்கள். அவர்கள் யார் என்றால் புகழ் மற்றும் சுனிதா. இவர்கள் இருவருக்குமே ஒரு எபிசோடுக்கு 20000 ரூபாய் சம்பளத்தை விஜய் டிவி கொடுக்கிறது. ஏனென்றால் சுனிதாவிற்கு தமிழே தெரியவில்லை என்றாலும் தப்பு தப்பாக பாட்டு பாடி அனைவரையும் சிரிக்க வைத்து விடுகிறார்.

அதே மாதிரி புகழ் யாரு அழகாக வந்தாலும் அந்தப் பெண் போட்டியாளர்களை கவுக்கும் விதமாக ஜொள்ளுவிட்டு வருவதால் இவர்கள் இருவருக்கும் அதிகமான சம்பளம் பெறுகிறார்கள். மேலும் குரேசிக்கு 15000, சரத்துக்கு 12000, ராமருக்கு 18000, வினோத்துக்கு 10,000, சபி சப்னம் 9000 மற்றும் வைஷாலிக்கு 9000 கொடுக்கிறார்கள். இதில் பிரியங்காவை விட புகழ் மற்றும் சுனிதாவிற்கு அதிக சம்பளத்தை கொடுத்து குக் வித் கோமாளிக்கு இவர்கள்தான் தூண் என்று விஜய் டிவி நிரூபித்து விட்டது.

Trending News