திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

90-களில் ரஜினிக்கு பயத்தை காட்டிய 2 நடிகர்களின் சம்பளம்.. ஒன்னுக்கு ஒன்னு சலச்சது இல்ல

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் 48 வருடங்களுக்கு மேல் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இப்போது வரை முன்னணியில் இருக்கிறார். இவருக்கு போட்டி இவராகத்தான் இருக்க முடியும். சினிமாவில் என்டரி கொடுத்த பொழுது ஸ்டைல், டான்ஸ், பேச்சு, நடிப்பு இதெல்லாம் இருந்ததோ அது இப்பொழுது வரை ஒருவருக்கு இருக்குது என்றால் சூப்பர் ஸ்டாருக்கு மட்டும்தான். அதனால் தான் அன்று முதல் இன்று வரை அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.

ஆனால் ஏதாவது ஒரு ஆச்சரியம் நடக்கும் என்றால் அது இவருடைய விஷயத்தில் நடந்திருக்கிறது. இவருடைய நடிப்புக்கு இடைப்பட்ட காலத்தில் அதாவது 90களில் இவரை மிஞ்சும் அளவிற்கு இரண்டு நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ரஜினி சம்பளம் 75 லட்சம் வாங்கிக் கொண்டிருந்த பொழுது இவரை தாண்டி ஒரு கோடி சம்பளம் ரெண்டு நடிகர்கள் வாங்கி இருக்கிறார்கள்.

Also read: லால் சலாம் படத்தின் கதை இதுதான்.. உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அந்த நடிகர்கள் யார் என்றால் ராஜ்கிரன் மற்றும் ராமராஜன். அப்பொழுது இவர்களின் படங்கள் ரொம்பவே உச்சத்தில் இருந்ததால் இவர்களுக்கு என்று ரசிகர்கள் அதிகமாகி விட்டார்கள். அதனால் இவருடைய மார்க்கெட் ரேஞ்சும் அதிகரித்து சம்பளமும் அதிகமாகிவிட்டது. அதனால் ரஜினியை மிஞ்சும் அளவிற்கு இவர்கள் ஒரு கோடி சம்பளத்தை வாங்கியுள்ளார்கள்.

அப்பொழுது ரஜினி சம்பளம் இந்த ரெண்டு நடிகர்களை விட கம்மியாக இருந்ததால் ஒரு கட்டத்தில் ரஜினி இவர்களை பார்த்து பயப்படும் அளவிற்கு ரொம்பவே சோர்ந்து போய்விட்டார். ஆனாலும் அதை ஓவர் டேக் பண்ணி தொடர்ந்து நடிப்பதிலும், ரசிகர்களை கவர்வதிலும் மட்டும்தான் இவருடைய முழு நேரமும் சிந்தனையாக இருந்தது.

Also read: நெல்சனின் ராஜதந்திரத்தை தவிடு பொடியாக்கிய ஐஸ்வர்யா.. நிலைகுலைந்து போன ரஜினிகாந்த்

அதனால் தான் ரஜினியால் தற்போது வரை முன்னணியில் இருக்க முடிகிறது. இவர்களுக்கு போட்டியாக வந்த அந்த ரெண்டு நடிகர்கள் இப்பொழுது சாதாரண நிலையில் தான் இருந்து வருகிறார்கள். ஆனால் ரஜினி முதல் இடத்தில் இருக்கிறார். எப்பொழுதுமே வெற்றியும் தோல்வியும் ஒரே பார்வையாக பார்க்கக் கூடியவர் தான் சூப்பர் ஸ்டார். அதனால் தான் அவரால் ஜெயிக்க முடிகிறது.

ஆனால் இப்பொழுது காலங்கள் படி சம்பளத்தை இவரை மிஞ்சும் அளவிற்கு விஜய் படையெடுத்து விட்டார். இவருக்கு இருக்கும் ரசிகர்களால் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறார். இதனால் இவருடைய சம்பளமும் சரி இவருடைய இமேஜும் ஒவ்வொரு படத்திற்கும் கூடிக் கொண்டே வருகிறது. தற்போது விஜய்யின் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடி வருகிறார்கள்.

Also read: கமலுக்கு நோ சொன்ன ரஜினிகாந்த்.. அதுவும் இந்த டாப் இயக்குனரை நழுவவிட்ட சோகம்!

Trending News