Vijay Tv : விஜய் டிவிக்கு போனாலே பணக்காரர் ஆகிவிடலாம் என்று பலர் கனவு காண்கிறார்கள். அதுவும் ஒரு விதத்தில் உண்மைதான் என்று நினைக்கும் வகையில் இந்த தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் தொகுப்பாளர்களின் சம்பளம் இருக்கிறது.
பட்டிமன்ற பேச்சாளராக வந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் அறந்தாங்கி நிஷா. இவர் ஒரு எபிசோடுக்கு ஐம்பதாயிரம் வரை சம்பளம் பெறுகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரக்சன் வெள்ளி திரையில் சில படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் விஜய் சன் டிவியில் தஞ்சம் அடைந்து விட்டார். இவர் ஒரு எபிசோடுக்கு ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.
விஜய் டிவி தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம்
அடுத்ததாக விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கபவர் தான் பிரியங்கா. இவர் ஒரு எபிசோடுக்கு இரண்டு லட்சம் வரை சம்பளம் பெறுகிறார். இது தவிர இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றிலும் சம்பாதித்து வருகிறார்.
நீயா நானா நிகழ்ச்சியை 10 வருடத்திற்கு மேலாக தொகுத்து வழங்கி வருகிறார் கோபிநாத். இவர் ஒரு எபிசோடுக்கு மட்டும் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம்.
விஜய் டிவியில் அது இது எது, ஜோடி நம்பர் ஒன் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் மாகாபா ஆனந்த். இவருக்கு ரெண்டரை லட்சம் ஒரு எபிசோடுக்கு கொடுக்கப்படுகிறது.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கர் ஆக நுழைந்தவர் தான் மணிமேகலை. அதன்பிறகு விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். ஆரம்பத்தில் 60 ஆயிரம் சம்பளம் வாங்கிய இவர் இப்போது ஒரு லட்சம் வரை பெற்று வருகிறார்.
ஒரு காலத்தில் விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக இருந்த டிடி இப்போது அந்த தொலைக்காட்சியில் இருந்து விலகி இருக்கிறார். ஏதாவது முக்கிய நிகழ்சிகளில் மட்டும் பங்குபெறும் டிடி 4 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்.