Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கோடிகள் ஒரு பக்கம் இருந்தாலும், லட்சங்களையும் விடாத சமந்தா.. வாரிக் கொடுக்கும் நிறுவனங்கள்

கோடிகள் ஒரு பக்கம் இருந்தாலும், லட்சங்களையும் விடாத சமந்தா.. வாரிக் கொடுக்கும் நிறுவனங்கள்

சமீபகாலமாக பல நடிகைகள் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு எக்கச்சக்கமான லைக்ஸ்களும் வந்து விழுகிறது. அதுமட்டுமல்லாமல் தினமும் போட்டோக்கள், வீடியோக்கள் என அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதையே நடிகைகள் வேலையாக வைத்துள்ளனர். இதில் சில கவர்ச்சியான புகைப்படங்களை […]

சமீபகாலமாக பல நடிகைகள் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு எக்கச்சக்கமான லைக்ஸ்களும் வந்து விழுகிறது. அதுமட்டுமல்லாமல் தினமும் போட்டோக்கள், வீடியோக்கள் என அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதையே நடிகைகள் வேலையாக வைத்துள்ளனர்.

இதில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது பட வாய்ப்புக்காக என பலரும் பேசி வருகின்றனர். ஆனால் முன்னணி நடிகையாக உள்ளவர்களும் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அவர்களை ஃபாலோ செய்பவர்கள்தான்.

ஏன் என்றால் பல மில்லியன் கணக்கில் ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் நடிகைகளுக்கு பல பெரிய நிறுவனங்களும் விளம்பரங்களுக்காக மிகப்பெரிய தொகையை கொடுத்து வருகிறது. அதில் நடிகை சமந்தா இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

அதுவும் புஷ்பா படத்திற்குப் பிறகு சமந்தாவை பல மில்லியனுக்கு மேலான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அதாவது இன்ஸ்டாகிராமில் சமந்தாவை 22 கோடிக்கு மேலான ரசிகர்கள் இவரை ஃபாலோ செய்கிறார்கள்.சமந்தா தான் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை அதிகம் வெளியிட்டு வருவார்.

ஆரம்பத்தில் சமந்தா விளம்பரங்களுக்காக 8 முதல் 12 லட்சம் வரை சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார். தற்போது சமந்தாவை அதிகமானோர் பின் தொடர்வதால் 15 முதல் 25 லட்சம் வரை விளம்பர நிறுவனங்களிடம் பணம் கேட்க முடிவு செய்துள்ளார்.

இதைக் கேட்ட பெரிய விளம்பர நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளதாம். இருந்தபோதும் சமந்தா நடித்தால் அந்த பிராண்டின் மார்க்கெட் மிகவும் உயரம் என்பதால் எவ்வளவு பணம் கொடுக்கவும் சில விளம்பர நிறுவனங்கள் தயாராக தான் உள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.