வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வீழ்ந்து விடுவேன் என நினைத்தாயோ.. ஜிம் ஒர்க் அவுட்டில் மிரள விட்ட சமந்தா

சமந்தாவின் யசோதா படத்தை தொடர்ந்து வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி சாகுந்தலம் திரைப்படம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா ரசிகர்களிடம் தன்னுடைய உடல்நிலை குறித்து கண்கலங்கி பேசியது சோசியல் மீடியாவையே உலுக்கியது.

அதன் பிறகு தற்போது தொடர் சிகிச்சையில் இருக்கும் சமந்தா, விரைவில் மீண்டு வருவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சமந்தா மறுபடியும் பிரச்சினையை விலை கொடுத்து வாங்குகிறாரா என நெட்டிசன்கள் விலாசம் வகையில், அவர் சோசியல் மீடியாவில் ஜிம்மில் வொர்க் செய்திருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Also Read: உடல் ஒத்துழைக்காததால் 25 கோடி நஷ்டம்.. பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட சமந்தா

இவருடைய இந்த வீடியோ பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. சிகிச்சையில் இருக்கும் போது இதெல்லாம் தேவையா என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த வீடியோவில் அவர் வெறித்தனமாக புல்லப் செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் தற்போது சமந்தா கடுமையான டயட்டை பின்பற்றுவதாகவும், அதனால் அவர் நிறைய கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘வலிமை என்பது எதை உணர்த்துகிறோம் என்பதில் இல்லை. நாம் எதை செய்கிறோம் என்பதில்தான் உள்ளது’ என்றும் கமெண்ட் செய்திருக்கிறார். சமந்தாவை பாதித்துள்ள அரிய வகை நோயை பொறுத்தவரையில் உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவது அவசியம்.

Also Read: மீண்டும் சமந்தா நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பதிலடி

மேலும் அலர்ஜி ஏற்படக்கூடிய உணவுகளை சாப்பிடுவதால் வீக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால் சமந்தா மருத்துவரின் ஆலோசனைப்படி முழுமையான சிகிச்சையை மேற்கொண்டு விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அதற்கிடையில் அவர் மேலும் கடுமையான உடற்பயிற்சி செய்து பக்க விளைவு ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இப்படி வெறித்தனமாக சமந்தா உடற்பயிற்சி செய்ய காரணம் வலியின்றி எதையும் முழுமையாகப் பெற முடியாது என சிகிச்சையுடன் உடற்பயிற்சியிலும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது சீக்கிரம் சமந்தா குணமடைந்து படத்தில் நடிக்க வந்து விடுவார் என்றும் ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஜிம்மில் வொர்க் செய்திருக்கும் வீடியோவை வெளியிட்ட சமந்தா

samantha-workout-cinemapettai
samantha-workout-cinemapettai

Also Read: சமந்தாவை தொடர்ந்து புதிய நோயினால் பாதிக்கப்பட்ட நடிகை.. புலம்பித் தவிக்கும் நிலமை

Trending News