திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அதிர்ச்சி தரும் செயலை செய்த சமந்தா.. இனி எல்லாத்துக்கும் குட்பை தான்

தன்னுடைய விவகாரத்தைப் பற்றி ரசிகர்களுக்கு தெரிவித்த பிறகு சமந்தா தற்போது தன்னுடைய பட வேலைகளில் பிஸியாகிவிட்டார். பல மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி ஆர்வமாக நடித்து வருகிறார்.  இருப்பினும் இவருடைய விவாகரத்து குறித்த செய்திகள்தான் ஊடகங்களில் அதிகமாக வெளியாகி வருகிறது.

சமந்தா தன்னுடைய நீண்ட நாள் நண்பர் நாக சைதன்யாவை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். நன்றாக இருந்த அவர்களின் திருமண வாழ்க்கை சில கருத்து வேறுபாடு காரணமாக தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளது.

சமந்தா தன்னுடைய கணவரை விட்டு பிரிய முடிவெடுத்த பிறகு தன் திருமணத்திற்காக நாகசைதன்யா குடும்பத்தினர் வாங்கி கொடுத்த அதிக விலை உயர்ந்த புடவையைக் கூட அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். அது மட்டுமல்லாமல் தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவர் பெயரை கூட அவர் நீக்கிவிட்டார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் இவர்கள் திரும்பவும் வாழ்க்கையில் ஒன்று சேர்வார்களா, மாட்டார்களா என்ற குழப்பத்தில் இருந்து வந்தனர்.

மேலும் விவாகரத்தை அறிவித்த பிறகு கூட சமந்தா, நாகசைதன்யா இருவரும் எந்த ஒரு பொது இடத்திலும் ஒருவரை ஒருவர் தவறாக பேசியது கிடையாது. அதுமட்டுமல்லாமல் நாக சைதன்யா, சமந்தாவை இப்போதுவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார். அதேபோல்தான் சமந்தாவும் நாக சைதன்யா குடும்பத்தினர் அனைவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

மேலும் நாங்கள் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்று சமந்தா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அவர்களுக்குள் இருப்பது ஒரு சின்ன கருத்து வேறுபாடு மட்டுமே இதுதான் அவர்களின் தற்போதைய பிரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் அவர்கள் கூடிய விரைவில் இணைந்து விடுவார்கள் என்று பலரும் கூறி வந்தனர்.

ஆனால் அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி தரும் படி ஒரு விஷயத்தை சமந்தா செய்துள்ளார். அது என்னவென்றால் தன் கணவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வந்த சமந்தா தற்போது அவரை அன் பாலோ செய்துள்ளார். இதை அறிந்த அவருடைய ரசிகர்கள் இனி அவர்கள் வாழ்க்கையில் இணைய மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

Trending News