வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விவாகரத்துக்கு பின்னும் ரகசிய உறவில் சமந்தா, வைரல் புகைப்படம்.. வயிற்றெரிச்சலில் நெட்டிசன்கள்!

Samantha Controversy: சென்னையில் பிறந்து வளர்ந்து தென்னிந்திய நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

இதனால் எரிச்சலடைந்த நாக சைதன்யா அவரை விவாகரத்து செய்துவிட்டார். ஆனால் விவாகரத்து ஆன பின்பும் முன்பை விட செம போல்டான கேரக்டர்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமந்தா மயோ சிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.

Also Read: முன்னாள் கணவனை நினைத்து கண்கலங்கிய சமந்தா… குஷி பட ப்ரோமோஷனில் நடந்த சம்பவம்

நோய்த்தொற்றின் தாக்கத்தினால் அவர் படங்களில் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியாததால் தொடர் தோல்விகளையும் சந்தித்து மார்க்கெட்டை இழந்து விட்டார். இதனால் தன்னுடைய உடல் நிலையில் முழு அக்கறை செலுத்த வேண்டும் என்று தீவிரமாக சிகிச்சை மேற்கொண்டு பின்பு சினிமாவில் வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்காக ஒரு வருட இடைவெளி எடுப்பதாக ரசிகர்களிடம் கூறியிருக்கிறார். இதற்காக கையில் இருக்கும் ப்ராஜெக்ட் முடித்த பிறகு சமந்தா சினிமாவில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்க இருக்கிறார். இந்த நிலையில் தற்போது சமந்தா அமெரிக்காவில் இருக்கிறார்.

Also Read: இரட்டை வேடத்தில் நடித்த 6 ஹீரோயின்கள்.. தயாரிப்பாளர் தலையில் துண்டை போட வைத்த நயன், சமந்தா

அங்கு 14 வருடமாக தன்னை காதலிப்பதாக சொன்ன ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக சைக்கிளில் ஊர் சுற்றும் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. விவாகரத்திற்கு பின்னும் ரகசிய உறவில் சமந்தா இருக்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆனால் அந்த ஆண் நண்பர் ஒரு தலையாகத்தான் சமந்தாவை காதலிப்பதாகவும், சமந்தா அவரிடம் நண்பராகத்தான் பழகுவதாகவும் சில ரசிகர்கள் சமந்தாவிற்கு ஆதரவாக பேசுகின்றனர். ஆனால் இதை வெளியில் இருந்து பார்க்கும்போது சமந்தா அந்த ஆண் நண்பருடன் ரகசிய உறவில் இருப்பது போல் தெரிகிறது.

 சமந்தா வைரல் புகைப்படம்                                                                     

actress-samantha-boy-friend-cinemapettai
actress-samantha-boy-friend-cinemapettai

Also Read: ஓ சொல்றியா மாமாவுக்கு ஒரு காவாலய்யா! ரஜினியை பின்னுக்கு தள்ளிய தமன்னா, ப்ளூ சட்டையின் சேட்டை

Trending News