வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மீண்டும் தீவிர சிகிச்சையில் சமந்தா.. பதற வைக்கும் புகைப்படம்

தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சைகளும் உடற்பயிற்சிகளும் மேற்கொண்ட சமந்தா கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வந்து கொண்டிருந்தார்.

இன்னொரு பக்கம் சாகுந்தலம் பட புரமோஷன் மற்றும் குஷி, சிட்டாடல் ஆகிய படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். இதனால் மறுபடியும் உடல்நிலை பலவீனமானது. இப்போது சமந்தா மையோசிடிஸ் நோயால் மீண்டும் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

Also Read: நெகட்டிவ் விமர்சனங்களுக்கு சமந்தா கொடுத்த 6 பதிலடிகள்.. சோறு போடும் முதலாளியை வறுத்தெடுத்த சாம்

சமந்தாவிற்கு ஹைபர்பேரிக் ஆக்சிஜன் சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சை வீக்கத்தை குறைக்கவும், நோய் தொற்றுகளை குணப்படுத்தவும் சேதமடைந்த திசுக்களை சரி செய்யவும் உதவி செய்யும்.

இந்த சிகிச்சையின் மூலம் விரைவில் மையோசிடிஸ் நோயை குணப்படுத்த முடியும். இதற்காக சமந்தாவிற்கு ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய் உள்ளனர். மேலும் சில தினங்களுக்கு முன்புதான் சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

Also Read: சமந்தா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்கும் ஆன்ட்டி நடிகை.. 40 வயதிலும் ஐட்டம் டான்ஸ் ஆட இவ்வளவு ஆசையாம்

அந்த சமயத்தில் தெலுங்கு ரசிகர் ஒருவர் தன்னுடைய வீட்டிலேயே சமந்தாவிற்கு கோயில் கட்டி அசத்தினார். இப்போது அதே கோயிலில் சமந்தாவின் உடல்நிலை பூரண குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் தரிசனம் செய்து கொண்டிருக்கின்றனர்.

மீண்டும் தீவிர சிகிச்சையில் சமந்தா

samantha-cinemapettai
samantha-cinemapettai

Trending News