திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கம்பேக்-னா இப்படி இருக்கணும்.. இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் புகைப்படம்

Actress Samantha: கடினமாக உழைத்து வந்தால் எந்த துறையிலும் வெற்றியைப் பெற்று விடலாம். அதே நேரத்தில் ஆரோக்கியத்தை இழந்து விட்டால் மொத்தமும் நம் கையை மீறி போய்விடும். இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு நடிகை சமந்தா தான். அவருடைய காதல் கணவர் நாக சைதன்யா உடனான விவாகரத்திற்கு பிறகு சினிமாவில் எப்படியாவது சாதித்து விட வேண்டுமென முன்பை விட அதிகமாகவே ஓட ஆரம்பித்தார். யார் கண் பட்டதோ தெரியவில்லை சமந்தாவுக்கு மையோசைட்டிஸ் என்னும் நோய் வந்துவிட்டது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு சமந்தா முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் கலக்கினார். புஷ்பா படத்தில் இவர் ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக சமந்தா ஜிம்மில் மட்டுமே குடித்தனம் நடத்தியது போல் தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்து சிக்கன தன் உடலை வைத்திருந்தார். மொத்தத்திற்கும் ஆப்பு வைக்கும் விதமாகத்தான் இந்த நோய் அவரை தாக்கி விட்டது.

தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த சமந்தாவிற்கு நோயின் தீவிரம் அதிகமானதால் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதை தொடர்ந்து சாகுந்தலம் மற்றும் குஷி போன்ற படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்து நீங்கிக்கொண்டு அட்வான்ஸ்களையும் திருப்பிக் கொடுத்தார். இருந்தாலும் சிட்டாடல் என்னும் வெப் சீரிஸில் மட்டும் நடித்துக் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகின.

Also Read:ஜிம்மில் தலைகீழாக தொங்கும் ஹன்சிகா.. வெறித்தனமாக வெளியான ஒர்க்அவுட் புகைப்படம்

சமீபத்தில் இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் அதில் சமந்தா கலந்து கொண்டிருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. படக்குழுவினர் எவ்வளவு தடுத்தும் சமந்தா உற்சாகமாக ஒரு அதிரடி ஆக்சன் காட்சியில் நடித்திருக்கிறார். ஆனால் நடித்து முடித்த பிறகு உடல் பலவீனமாகி மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டதாகவும் இந்தி சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைரலாகும் சமந்தாவின் புகைப்படம்

மையோசைட்டிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சமந்தா ஏன் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டும் என அவருடைய ரசிகர்கள் தற்போது தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். விவாகரத்து, நோயின் தீவிரம் என அடுத்தடுத்து நெகட்டிவ் விஷயங்களை சந்தித்து வரும் சமந்தாவிற்கு சினிமா மட்டுமே ஆறுதலாக இருப்பதால்தான், அவர் தொடர்ந்து நடித்து வருகிறார் எனவும் சினிமா வட்டாரங்கள் பேசி வருகிறது.

சிட்டாடல் வெப்சீரிஸின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் சமந்தா டப்பிங் கூட பேசி வருகிறார். அவர் டப்பிங் பேசும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பயங்கர ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. கருப்பு கலர் டி-ஷர்ட் மற்றும் நீல கலர் ஜீன்ஸ் அணிந்திருக்கும் சமந்தாவின் முகம் ரொம்பவும் சோர்வுற்று இருப்பது பார்த்தாலே தெரிகிறது. இருந்தாலும் கம்பேக் கொடுத்தே ஆக வேண்டுமென அவர் முயற்சி செய்வது பாராட்டுதலுக்குரியது.

Samantha New
Samantha New

Also Read:பிரசன்னாவிற்கு முன் தயாரிப்பாளருடன் நடந்த விஷயம்.. சினேகாவை பற்றி புட்டு புட்டு வைத்த பயில்வான்

Trending News