செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நோயின் அவஸ்தையால் சமந்தாவிடமிருந்து பறிபோகும் பட வாய்ப்பு.. சத்தம் இல்லாமல் தட்டி தூக்கிய அம்மா நடிகை

இன்றைய தென்னிந்திய சினிமாவில் நடிகை நயன்தாராவுக்கு இணையாக ஏன் அவரை விட ஒரு படி மேலே போய்க் கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இயக்குனர்கள் ஹரி – ஹரிஷ் இயக்கி சமந்தா தனிக்கதாநாயகியாக நடித்த யசோதா திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி கோடிகளில் வசூலை அள்ளி கொண்டிருக்கிறது. திரும்பும் பக்கமெல்லாம் இந்த படம்தான் இப்போது ட்ரெண்ட்.

தமிழில் நயன்தாரா இதுபோன்ற ஒரு மாஸ் வரவேற்பை தனிக்கதாநாயகியாக நடித்த படங்களுக்கு பெற்றிருந்தார். இப்போது சமந்தாவுக்கு அந்த வரவேற்பு கிடைத்திருக்கிறக்கிறது. இந்நிலையில் இந்த யசோதா படம் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் தனக்கு Myositis எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Also Read: சமந்தா போல் கவர்ச்சிக்கு மாற ஆசைப்படும் ஹீரோயின்.. அடுத்தடுத்த படங்களில் புக் செய்த அகில உலக சூப்பர் ஸ்டார்

இந்த பதிவினால் திரையுலகினரும், ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பல பிரபலங்களும் சமந்தாவுக்கு தங்களுடைய ஆறுதலை சொல்லியிருக்கின்றனர். இந்த மருத்துவ சிகிச்சையை பற்றி சமீபத்தில் சமந்தாவும் மனம் திறந்து பேசியிருந்தார். இந்த சிகிச்சையினால் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆக முடியாத சமந்தா ஒரு மிகப்பெரிய வாய்ப்பை இழந்து இருக்கிறார்.

சமந்தா டாப் ஹீரோயினாக இருந்த போதே அவருடைய விவாகரத்து செய்தி வெளியானது. இனி சமந்தா கேரியர் அவ்வளவுதான் என்று வதந்தி கிளம்பிய போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் இவர் ஆடிய இடம் ஐட்டம் டான்ஸ் மீண்டும் ஒரு படி மேலே கொண்டு போனது. மீண்டும் இளைஞர்களிடையே சென்சேஷனல் ஆனார் நடிகை சமந்தா.

Also Read: ஹீரோ, ஹீரோயின்களுக்கு குட்டு வைத்த திரையுலகம்.. சமந்தா, நயன்தாராவுக்கு வச்ச ஆப்பு

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. இந்த படம் 2024 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் ஒரு ஐட்டம் டான்ஸ் வைக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. சமந்தா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் டான்ஸ் ஆட முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

இதனால் படக்குழு அணுகியிருப்பது நடிகை காஜல் அகர்வாலை தானாம். காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சுலு என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. காஜல் திருமணம் ஆன பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். புஷ்பா படத்தில் இவர் ஸ்பெஷல் டான்ஸ் ஆடுவாரா என்பது இனி தான் தெரியும்.

Also Read: வாடகைத் தாயாக பலகோடி பிசினஸ், குழப்பி விட்ட சமந்தா.. யசோதா வெற்றியா? தோல்வியா? முழு விமர்சனம்

Trending News