வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அப்போ வானதி இல்லையா.? சமந்தா, நாக சைதன்யாவுக்கு விரைவில் திருமணம்

Samantha- Naga Chaithanya : தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சமந்தா, நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களிலேயே குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதன் பிறகும் சமந்தா சினிமாவில் கொடிகட்டி பறந்த நிலையில் மையோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இப்போது அதில் இருந்து குணம் பெற்று வரும் நிலையில் தொடர்ந்து படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் சமந்தாவை பற்றி காட்டுத்தீபோல் ஒரு செய்தி பரவி வந்தது.

அதாவது சமந்தாவை அவரது குடும்பம் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தி வருவதால் வாரிசு நடிகர் ஒருவரை கல்யாணம் செய்ய உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதை அடுத்து நாக சைத்தன்யாவுக்கும் விரைவில் இரண்டாவது திருமணம் நடக்க இருக்கிறது.

Also Read : என்னது, சமந்தாவுக்கு மீண்டும் டும் டும்மா.. வாரிசு நடிகருடன் காட்டும் நெருக்கம்

ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபித்த துலிபாலா உடன் நாக சைதன்யா கிசுகிசுக்கப்பட்டார். அவருடன் தான் இப்போது திருமணம் நடக்க உள்ளதாக நினைத்த நிலையில் நாகார்ஜுனாவின் குடும்ப உறவினர் பெண் ஒருவருடன் திருமணம் நடக்க உள்ளதாம்.

சமந்தா மற்றும் நாகச் சைதன்யா இருவருக்குமே வேறு ஒருவருடன் விரைவில் மறுமணம் நடக்க இருக்கிறது. முதல் திருமணம் சில காரணங்களினால் விரைவில் முடிவுற்றாலும் இந்த திருமணம் நீடித்து இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Also Read : நான் நடிக்கலானாலும் எந்த கஷ்டமும் இல்லை.. சம்பாதித்த பணத்தில் சமந்தா நடத்தி வரும் தொழில்கள்

Trending News